லண்டன் : சென்ற ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூதாட்ட ஏஜெண்ட் மஜீத்துடன் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோருக்கு லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் பட்டிற்கு 30 மாத சிறை தண்டனையும், முகம்மது ஆசிபிற்கு 1 வருட சிறை தண்டனையும் மற்றொரு வீரரான முகம்மது 6 மாத சிறை தண்டனையும் லண்டன் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சூதாட்ட ஏஜெண்டான மஜீத்துக்கு 32 மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது லண்டன் நீதிமன்றம். சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பாகிஸ்தான் அணியின் மூன்று விளையாட்டு வீரர்களை(சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர்) 'குற்றவாளிகள்' என்று, சென்ற புதன் கிழமையன்று லண்டன் நீதி மனறத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினால் மிகவும் வருத்ததிற்கு உள்ளானது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். தற்போது, இன்று வெளியான தீர்ப்பு மூலம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குற்றவாளி கூண்டில் நின்ற மூன்று வீரர்களின் தரப்பில் வக்கீல்கள் வாதாடினார்கள். அவர்கள் பேசுகையில், மூவரும் புரோக்கர்கள் விரித்த வலையில் சிக்கி சீர்க்கெட்டுப் போனது அம்பலமாகியதாக வாதிட்டனர். ஆனால் இதனை ஏற்காத நீதிபதி மூன்று பேருக்கும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பை கேட்ட சல்மான் பட் உள்ளிட்ட வீரர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அடுத்தக்கட்ட முடிவு...
மூவர் தரப்பு வக்கீல்களின் வாதத்திற்கு பிறகு, நீதிபதி ஜெர்மி குக் கூறியதாவது, லஞ்ச குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் அணியின் மூன்று வீரர்களுக்கும், சிறை தண்டனை வழங்க உத்தரவிட்டப் பிறகும், வழக்கு தொடரும் என்று கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி வரவிருக்கும் வீராகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிகிறது.


0 comments:
Post a Comment