Pages

Friday, November 4, 2011

சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்டிற்கு 30 மாத சிறை!

Best Blogger Tips
லண்டன் : சென்ற ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூதாட்ட ஏஜெண்ட் மஜீத்துடன் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோருக்கு லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் பட்டிற்கு 30 மாத சிறை தண்டனையும், முகம்மது ஆசிபிற்கு 1 வருட சிறை தண்டனையும் மற்றொரு வீரரான முகம்மது 6 மாத சிறை தண்டனையும் லண்டன் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சூதாட்ட ஏஜெண்டான மஜீத்துக்கு 32 மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது லண்டன் நீதிமன்றம். 

Thursday, November 3, 2011

இலங்கை அணியில் மீண்டும் தில்ஹார; பாக். அணியில் மீண்டும் அவ்ரிடி

Best Blogger Tips
பாகிஸ்தான் அணியுடனான சர்வதேச ஒருநாள் சுற்றுப்போட்டிக்கான இலங்கைக் கிரிக்கெட் அணியில் வேகப்பந்துவீச்சாளர் தில்ஹார பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்காக 15 பேர் கொண்ட இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தில்ஹாரவும் ஒருவராவார்.
32 வயதான தில்ஹார இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் மேற்கிந்திய அணிக்கெதிராக விளையாடினார்.  உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான குழாமில் தில்ஹார இடம்பெற்றிருந்த போதிலும் எந்தவொரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை. அதன்பின் இங்கிலநர்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 2, 2011

ஆட்டநிர்ணய மோசடி வழக்கில் சல்மான் பட், ஆஷிவ் குற்றவாளிகள்; லண்டன் நீதிமன்றம்

Best Blogger Tips
ஆட்டநிர்ணய மோசடி தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான சல்மான் பட் , மொஹமட் ஆஷிவ் ஆகியோர் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அணித்தலைவரான சல்மான் பட் (27) மொஹமட் ஆஷிவ் ஆகியோர் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதற்கு சதி செய்தாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்திருந்தனர்.
எனினும் லண்டனின் சௌத்வர்க் கிறவுன் நீதிமன்றம்,  இவ்விரு வீரர்களும் ஏமாற்றுவதற்கு சதிசெய்தமை, மோசடிப் பணத்தை பெறுவதற்கு சதிசெய்தமை ஆகிய விடயங்களில் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் 26-29 ஆம் திகதிகளுக்கிடையில் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துடனான  டெஸ்ட் போட்டியின்போது சூதாட்ட முகவரான மஸார் மஜீத் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே நோபோல் வீசியதாக சல்மான் பட், மொஹமட் ஆஷிவ், மற்றும் மொஹமட் அமீர் ஆகிய வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குறைந்தபட்சம் 3 நோபோல்கள் வேண்டுமென்றே வீசப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களில் மொஹமட் அமீரும் சூதாட்ட முகவர்கள் மஸார் மஜீத்தும் ஏற்னெவே குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சல்மான் பட்டும் மொஹமட் ஆஷிவ் ஆகியோர் மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்ட போட்டிக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தியதாகவும் இதன் மூலம் அவர்களின் அணியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையையும் ஏமாற்றியதாகவும் வழக்குத் தொடுநர்கள் வாதிட்டனர்.
இவ்விரு வீரர்களுக்கான தண்டனை இவ்வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. அதுவரை இவர்களுக்கான பிணை நீடிக்கப்பட்டுள்ளது.
சல்மான் பட் 7 வருடம் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய நிலையை எதிர்நோக்கியுள்ளார்.  விதிக்கப்படலாம். பிரிட்டனில் ஏமாற்றுவதற்கு சதி செய்த குற்றத்திற்கான குறைந்தபட்ச தண்டனையில் இருவருட கடூழிய சிறைத்தண்டனையும் அடங்கலாம்.
 



Saturday, October 29, 2011

9 விக்கெட்டுகளால் இலங்கையை வென்றது பாகிஸ்தான் அணி

Best Blogger Tips
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
துபாயில் நடைபெற்ற  இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 239 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 403 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மணமகனாக ஜொலிக்கிறார், இந்திய கிரிக்கெட் அணி வீரர் கௌதம் கம்பீர்

Best Blogger Tips
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயினை இன்று மணக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்நதவர். அவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயின் என்பவரை சந்தித்தார். 

அவர்கள் நட்பு, காதலாக மாறியது. அவர்கள் காதலுக்கு இரு வீ்ட்டாரும் பச்சைக் கொடி காட்டியதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குர்கானில் உள்ள பண்ணை வீட்டில் கம்பீர், நடாஷா திருமணம் நடக்கிறது. இதில் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் பாதுஷா ஷாருக் கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. கௌதம் கம்பீர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு மணமகளுக்கு மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷாந்தனு-நிகில் கம்பீர், நடாஷா உடைகளை வடிவமைத்துள்ளனர். நாளை கொல்கத்தாவில் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் டுவென்ட்டி 20 போட்டியில் கம்பீர் விளையாடமாட்டார். நாளை நடக்கும் போட்டிக்காக இந்திய அணியினர் பயிற்சி மேற்கொண்டுள்ளதால் அவர்கள் திருமணத்திற்கு வரமாட்டார்கள்

Sunday, October 23, 2011

சூதாட்ட தரகர் மசார் மஜீத் என்னை அணுகினார்: அப்ரிடி

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய போது “ஸ்பாட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Friday, October 21, 2011

இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம்: பார்சிலோனா முடிவு

Best Blogger Tips
இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம் நடத்த பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கால்பந்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Monday, October 17, 2011

தென் ஆப்ரிக்கா அணி திரில் வெற்றி

Best Blogger Tips

பரபரப்பான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, அவுஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி முதல் கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் பங்கேற்றது.

முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. டொஸ் வென்ற அவுஸ்திரேலிய கப்டன் கேமரான் ஒயிட் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர்(0), மாத்யூ வேட்(10) ஏமாற்றம் அளித்தனர். ஷான் மார்ஷ்(26), டேவிட் ஹசி(12), கேமரான் ஒயிட்(39) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். கடைசி கட்டத்தில் மிட்சல் மார்ஷ் அதிரடியாக 36 ரன்கள் விளாச 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணியின் டாப்-ஆர்டர் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். கப்டன் ஹஷிம் ஆம்லா(4), ஸ்மித்(24), இங்கிராம்(5), டுமினி(0) விரைவில் வெளியேறினர். போத்தா 34 ரன்களுக்கு நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

இந்த நேரத்தில் டெயிலெண்டர்களான வெய்ன் பார்னல், திரான் சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் 8வது விக்கெட்டுக்கு 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. டேவிட் ஹசி வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டிய திரான் அணிக்கு திரில் வெற்றி தேடி தந்தார்.

தென் ஆப்ரிக்க அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்னல்(29), திரான்(30) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை திரான் பெற்றார்.

News:LankaSri

இந்தியாவின் வெற்றி தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல்

Best Blogger Tips

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் வென்ற இந்திய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் சோபிக்கத்தவறிய பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே ஜோடி இன்று சூப்பர் துவக்கம் அளிக்க வேண்டும். மூன்றாவது வீரராக களமிறங்கும் கவுதம் காம்பிர், சொந்த ஊரில் சாதித்துக் காட்டினால் நல்லது.

விராத் கோஹ்லி துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா நல்ல பார்மில் இருப்பது பலம்.

ஐதராபாத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த இவர்கள் இன்றும் கைகொடுக்கும் பட்சத்தில் மீண்டும் இமாலய இலக்கை பதிவு செய்யலாம். ரவிந்திர ஜடேஜா, ஆல்-ரவுண்டராக எழுச்சி கண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் இல்லாத நிலையில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்கள் முதலாவது போட்டியில் சாதித்து காட்டினர்.

இவர்களது சுழல் ஜாலம் இன்றும் தொடர வேண்டும். பிரவீண் குமார் வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளிப்பது பாராட்டுக்குரியது. வினய் குமார் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. உமேஷ் யாதவ் இன்றும் சாதிக்கலாம்.

இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் கப்டன் அலெஸ்டர் குக் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். இவரது பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடர்ந்தால் நல்லது.

துவக்க வீரராக கீஸ்வெட்டர் எழுச்சி பெற வேண்டும். கெவின் பீட்டர்சன் துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் ரன் வேட்டை நடத்தலாம். மிடில்-ஆர்டரில் ஜோனாதன் டிராட், ரவி போபரா, பேர்ஸ்டோவ், சமித் படேல், டிம் பிரஸ்னன் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். முதல் போட்டியில் விளையாடாத இயான் பெல் இன்று களமிறங்கலாம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட திறமையான அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி திணறுகிறது.

டிம் பிரஸ்னன், ஸ்டீவன் பின், டெர்ன்பாக் உள்ளிட்ட வேகங்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம். சுவான் தனது சுழல் ஜாலத்தை காட்டினால் நல்லது.

வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்தும் காத்திருப்பதால் இன்று கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.

News:LankaSri

மரதன் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Best Blogger Tips

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆம்பெர் மில்லர் (27). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது சிகாகோவில் 26.2 மைல் தூரத்தை கடக்கும் மராத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் ஆம்பெர் மில்லர் கலந்து கொண்டு ஓடினார்.
நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்தாலும் மன தைரியத்துடன் ஓடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை சிகாகோவில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜூன் என பெயரிடப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த போதும் மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றது குறித்து ஆம் பெர் மில்லர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அதில், தனது கணவர் ஜோ மற்றும் டாக்டரின் அறிவுரைப்படி திட்டமிட்டு செயல்பட்டதாக கூறினார்.மேலும் 2 மைல் தூரம் ஓடியும், 2 மைல் தூரம் நடந்தும் பந்தய தூரத்தை கடந்ததாக தெரிவித்தார்.

News:LankaSri

இந்தியாவின் வெற்றி தொடரும் : கங்குலி நம்பிக்கை

Best Blogger Tips

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா 126 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் டில்லியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கங்குலி கூறியிருப்பது:

இந்திய அணி வலிமையானது. உலகின் எந்த அணியையும் வெல்லும் திறன் உள்ள வீரர்கள் நமது அணியில் உள்ளார்கள். அணியில் தொடர்ந்து இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வீரர்கள் காயமடைந்ததுதான் முன்பு இங்கிலாந்துத் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததற்குக் முக்கியக் காரணம். முக்கியமாக ஜாகீர் கான் காயமடைந்தது, பந்து வீச்சை பலவீனமாக்கி விட்டது.

சுரேஷ் ரெய்னா சிறந்த வீரர். அவர் டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றி தொடரும். ஆனால் அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு நடைபெறும் போட்டிகள் நமது வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஐபிஎல், ரஞ்சி டிராபி போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் பணியையும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன் என்றார்.

தனியார் நிறுவன விளம்பர நிகழ்ச்சிகாக பிகார் தலைநகர் பாட்னாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று வந்த கங்குலி இவ்வாறு தெரிவித்தார்.

News:LankaSri

தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி

Best Blogger Tips

இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாமுவேல்சின் அதிரடி கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்று தொடரை கைப்பற்றியது.
வங்கதேசம் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி மிர்புரில் நடந்தது.

டொஸ் வென்ற வங்கதேச கப்டன் முஷ்பிகுர் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். துவக்க வீரர் தமிம் இக்பால்(1) ஏமாற்றினார். அனுபவ வீரர்கள் இம்ருல் கைய்ஸ், அஷ்ரபுல் டக் அவுட்டாகினர். நாசிர் ஹொசைன்(50), முஷ்பிகுர்(69) ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச அணி 48.5 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ்(80) சூப்பர் துவக்கம் தந்தார். டான்ஜா(39), சாமுவேல்சும்(88*) கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 42.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

News:LankaSri

விரைவில் வெற்றி பாதைக்கு திரும்புவோம்: குக்

Best Blogger Tips

இனி வரும் போட்டிகளில் எழுச்சி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என இங்கிலாந்து அணி கப்டன் குக் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.

இதுகுறித்து கப்டன் குக் கூறியது: இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என மூன்றிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக களத்தடுப்பில் சொதப்பியதால் இந்திய அணி 300 ரன்னை எடுத்தது. இது மீண்டும் தொடராது, விரைவில் எழுச்சி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். இந்த ஒரு தோல்வியால் தன்னம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.

டொஸ் வெல்வது என்பது முக்கியமான ஒன்று. அதனை இழந்துவிட்டோம். முதல் போட்டியிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொண்டோம்.

சுழலுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியாமல் வீரர்கள் திணறினர். இதுவே தோல்விக்கு வழி வகுத்தது.

அடுத்த போட்டிக்காக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். சுழலுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாதிப்போம்.

News:LankaSri

20 ஓவர் கிரிக்கட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

Best Blogger Tips

நியூசிலாந்து கிரிக்கட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.

டொஸ் வென்ற நியூசிலாந்து அணி கப்டன் பிரன்டன் மெக்கல்லம், ஜிம்பாப்வே அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கப்டன் டெய்லர் 46 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணி தரப்பில் மில்ஸ், நாதன் மெக்கல்லம் தலா 2 விக்கெட்டும், பிரைஸ்வெல், ஓரம், உட்காக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 124 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 13.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 127 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் 36 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்னும், பிரன்டன் மெக்கல்லம் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 81 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பிரன்டன் மெக்கல்லம் ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

News:Lanka Sri

காம்பீர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்: வாசிம் அக்ரம்

Best Blogger Tips

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காம்பீர் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். தெண்டுல்கர், ஷேவாக் ஆடினால் மட்டுமே அவர் மூன்றாவது வீரராக விளையாடுவார்.
மற்ற நேரங்களில் தொடக்க வீரராக விளையாடுவார். தெண்டுல்கருடனோ அல்லது ஷேவாக்குடனோ இணைந்து தொடக்க வீரராக ஆடுவார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர், ஷேவாக் இடம் பெறவில்லை. இதனால் காம்பீர் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரகானேயும், பார்த்தீவ் பட்டேலும் தொடக்க வீரராக விளையாடினார்கள். காம்பீர் மூன்றாவது வீரராக ஆடினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காம்பீர் காயம் காரணமாக விளையாடாததால் பார்த்தீவ் பட்டேலும், ரகானேயும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அதே நிலையை அணி நிர்வாகம் தற்போது பின்பற்றி உள்ளது. இந்த நிலையில் காம்பீர் தொடக்க வீரராக ஆட வேண்டும், அதை தான் விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் கப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம் காம்பீரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது வீரராக களம் இறங்கியதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர் தொடக்க வீரராக உறுதியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன்.

அவர் தொடக்க வீரராக விளையாடுவதையே நான் விரும்புகிறேன். அவர் ஒரு திறமை வாய்ந்த துடுப்பாட்டக்காரர் ஆவார். 50 ஓவர் வரை நின்று ஆடக்கூடிய திறமை உள்ளது. உமேஷ் யாதவின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. அவர் அதிகமான யார்க்கர் போட்டார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

வருண் ஆரோனுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்க இதுவே நல்ல தருணம்.

ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைமர்ஸ் அணியின் கப்டனாக காம்பீர் உள்ளார். அதே அணியின் பந்துவீச்சு ஆலோசகராக வாசிம் அக்ரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News:Lanka Sri

Sunday, October 16, 2011

மும்பை மைதானத்தில் பயிற்சியை துவக்கினார் சச்சின்

Best Blogger Tips

காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின் நேற்று மும்பையில் துடுப்பாட்ட பயிற்சியை துவக்கினார்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் சச்சின். ஒரு நாள் தொடர் துவங்க இருந்த நேரத்தில் ஏற்கனவே ஆப்பரேஷன் செய்திருந்த இவரது கால் பெருவிரலில் லேசாக வீக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து வீக்கமும், வலியும் அதிகரித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் நாடு திரும்பினார். இதுகுறித்து லண்டனில் உள்ள ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜேம்ஸ் கால்டரை சந்தித்தார். அவரது ஆலோசனையில் பேரில் சச்சினுக்கு என தனிப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட ஷூ அணிந்து வந்தார்.

சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மும்பை அணிக்கு ஹர்பஜன் சிங் தலைமை ஏற்று கோப்பை வென்று தந்தார். போட்டிகளில் பங்கேற்கவில்லை என்ற போதிலும் சச்சின் தனது அணியினருடன் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான அணியிலும் சச்சின் தேர்வு செய்யப்படவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் சச்சின் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து சச்சின் வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது அணிக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சேவாக்கும் வரவுள்ள நிலையில் சச்சினும் பயிற்சிக்கு திரும்பியது இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

News: Lanka Sri

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: இறுதிச்சுற்றுக்கு பெர்ரர் முன்னேற்றம்

Best Blogger Tips

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு விளையாட ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் தகுதி பெற்றார்.
இரட்டையர் பிரிவு அரை இறுதியில் மேக்ஸ் மிரினி(பெலாரஸ்), டேனியல் நெஸ்டர்(கனடா) ஜோடியுடன் நேற்று மோதிய பயஸ் ஜோடி 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்றது. இறுதிப் போட்டியில் மைக்கேல் லோத்ரா-நேனட் ஜிமான்ஜிக் ஜோடியுடன் மிர்னி-நெஸ்டர் ஜோடி மோதுகிறது.

ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ஸ்பெயின் வீரர்கள் டேவிட் பெர்ரர்-பெலிசியானோ லோபஸ் மோதினர்.

கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் பெர்ரர் 6-7(5-7) என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். எனினும் அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த அவர் 6-3 என்ற கணக்கில் வென்று 1-1 என சமநிலைப்படுத்தினார்.

இதையடுத்து கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. பெலிசியானோவின் சர்வீஸ்கள் முறியட்டித்து புள்ளிகளைக் குவித்த பெர்ரர் 6-7(5-7), 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

News:Lanka sri

2012 யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ரூனே விளையாட தடை

Best Blogger Tips

2012ல் நடக்கவுள்ள யூரோ கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி, மான்டினிகிரோ அணிக்கு எதிராக டிரா செய்தது.
இந்த போட்டியில் பவுல் செய்த இங்கிலாந்து நட்சத்திர வீரர் ரூனேவுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டது.

இதையடுத்து வரும் யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்கும் மூன்று லீக் போட்டிகளிலும் ரூனே விளையாட தடை விதிக்கப்பட்டது.

இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, October 15, 2011

125 நாட்களுக்கு பின் கிடைத்த வெற்றி: டோனி மகிழ்ச்சி

Best Blogger Tips

இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முதல் ஒன்டேயில் ஐதராபாத்தில் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது.
டோனி 87, ரெய்னா 61, கோக்லி 37, காம்பீர் 32, ஜடேஜா 27 ரன் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியை சுழற்பந்து வீச்சாளர்கள் திக்குமுக்காட செய்தனர்.

36.1 ஓவரில் இங்கிலாந்து 174 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 126 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குக் 60 எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 63 ரன்களுக்கு சாய்ந்தது. இந்தியா தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3, உமேஷ்யாதவ் 2, பிரவீன்குமார் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக இந்திய அணி ஜூன் 11ந் திகதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது.

125 நாட்களுக்கு பின்னர் தற்போது 126 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. வெற்றி குறித்து கப்டன் டோனி அளித்த பேட்டி: பழிவாங்கும் தொடர் என்று இதை கூற முடியாது. பழிவாங்கும் என்ற சொல் மிகவும் கடுமையானது. இங்கிலாந்தில் பிற்பாதியில் நாங்கள் சிறப்பாகதான் ஆடினோம். மழையால் தான் பிரச்னை ஏற்பட்டது.

தற்போது இந்த தொடர் இளம் வீரர்கள் தங்களை முன்னேற்றி கொள்ள உதவும். நீண்டநாட்களுக்கு பிறகு இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆட்டமும் சிறப்பாக இருந்தது.

நான் ஆடிய ஆட்டங்களில் இது மதிப்புமிக்க ஒன்று. 6வது இடத்தில் களமிறங்குவதால் எனது துடுப்பாட்டத்தில் நிறைய மாற்றங்களை ஏற்கனவே செய்து விட்டேன். தற்போது ராக்கெட் ஷாட் அடிப்பதற்கு அதிகம் பயிற்சி எடுத்தேன்.

இந்த ஆட்டத்தில் அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பனிப்பொழிவு பிரச்னை இருக்கும் என்று நினைத்ததால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம். ஆனால் அந்த பிரச்னை அவ்வளவாக இல்லை.

ஜடேஜா மிகச்சிறந்த வீரர். பந்துவீச்சுடன் துடுப்பாட்டத்திலும் அவர் அசத்தினார். உமேஷ்யாதவ் நன்கு வேகமாக செயல்பட்டார்.

ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை: பிசிசிஐ [

Best Blogger Tips

ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) கிரிக்கட் போட்டி 2012 ஏப்ரல் 4 முதல் மே 27 வரை நடைபெறவுள்ளது. 
தொடக்க விழா ஏப்ரல் 3ம் திகதியும், முதல் ஆட்டம் ஏப்ரல் 4ம் திகதியும் நடைபெறுகிறது. இவை இரண்டுமே சென்னையில் தான் நடைபெறுகிறது.

Thursday, October 6, 2011

கலக்கல் வெற்றி பெற்ற பெங்களூரு அணி: பரிதாபத்துடன் வெளியேறிய தெற்கு அவுஸ்திரேலியா

Best Blogger Tips
சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு பெங்களூரு அணி ஜோராக முன்னேறியது.
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்தார் அருண் கார்த்திக். தோல்வியடைந்த தெற்கு அவுஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. இதில் பெங்களூரு றொயல் சாலஞ்சர்ஸ், தெற்கு அவுஸ்திரேலிய அணிகள் மோதின. டொஸ் வென்ற கிளிங்கர் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

Tuesday, October 4, 2011

அரையிறுதிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ்? : இன்று பலப்பரீட்சை

Best Blogger Tips
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனினும் இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் நியூ செளத் வேல்ஸ் அணியுடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும்.

Sunday, July 3, 2011

புகார் கூறிய தோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அவுஸ்திரேலிய பத்திரிக்கைகள்

Best Blogger Tips
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய வீரர்களுக்கு நடுவர் ஹார்பர் தவறான அவுட் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
டோனி இதுகுறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து 3வது பயிற்சி போட்டியில் நடுவர் பொறுப்பில் இருந்து ஹார்பர் விலகினார்.
இந்த நிலையில் அவர் கூறியதாவது: எல்லா ஆட்டங்களிலும் எனது முழு அளவிலான நடுவர் தீர்ப்பையே அளித்திருக்கிறேன். 94 சதவீதம் நான் சரியாக தீர்ப்பளித்திருப்பதாக ஐ.சி.சி.யே கூறியுள்ளது.
முதல் பயிற்சி போட்டியில் ஹர்பஜன், தோனி ஆகியோருக்கு மட்டுமே நான் தவறான அவுட் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதை தேவையில்லாமல் இந்திய வீரர்கள் பிரச்னையாக்கி விட்டனர்.
மேலும் ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் விமர்சித்துள்ளார். இதற்கு இந்திய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அவுஸ்திரேலிய பத்திரிகைகள் நடுவர் மீது புகார் கூறிய டோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளன.
News:Lankasri

Tuesday, June 28, 2011

2015 ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கட் போட்டி: 14 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவிப்பு

Best Blogger Tips
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015 ம் ஆண்டு கிரிக்கட் உலகக் கோப்பை போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
முன்னதாக முதல் தர 10 அணிகள் மட்டுமே 2015 ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வீரர்கள் தரப்பிலிருந்தும் சிறிய அணிகளின் வாரியங்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து இந்த ஆண்டுக் கூட்டத்தில் அது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவர் ஷரத்பவார் 2015 உலகக் கோப்பை கிரிக்கட்டிற்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் பற்றி விவாதிக்கவேண்டும் என்று செயற்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

உலகக் கோப்பை வெல்வது எனது கனவு அல்ல: மெஸ்சி

Best Blogger Tips
அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி, கோபா அமெரிக்கா கோப்பையை வெல்வதே தனது கனவு என்று கூறியுள்ளார்.
அர்ஜென்டினா அணிக்கு நீண்ட காலமாக கோபா கோப்பை கனவாகவே இருந்து வருகிறது. தனது நாட்டிற்கு கோப்பை வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்று மெஸ்சி கூறினார்.
1993 ம் ஆண்டிலிருந்து அர்ஜென்டினா அணிக்கு கோபா அமெரிக்க கோப்பை கனவாகவே உள்ளது. கோபா அமெரிக்க கோப்பை போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்காவை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 1916 ம் ஆண்டு முதல் இந்த சர்வதேச போட்டி நடைபெறுகிறது. கோபா அமெரிக்காவில் அர்ஜென்டினா இறுதியாக 1993 ம் ஆண்டு தான் சாம்பியன் ஆகி இருந்தது. மெஸ்சி போன்ற உலகின் தலைச்சிறந்த வீரர்கள் இருந்த போதும், அர்ஜென்டினா அணி கோபா கோப்பையில் சமீப ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
அர்ஜென்டினா மக்களும், பார்சிலோனா மக்களும் தன்னை பெரிதும் போற்றுகின்றனர். இருப்பினும் துரதஷ்டவசமாக கோபா அமெரிக்க கோப்பை பெற முடியாத நிலை உள்ளது. எனது கனவு உலகக் கோப்பையை வெல்வது அல்ல. கோபா அமெரிக்க கோப்பையை வெல்வது தான் எனது லட்சியக் கனவு என்றும் மெஸ்சி தெரிவித்தார்.
News:Lankasri

Monday, June 27, 2011

ஷாருக்கானுடன் மோதலில்லை : கங்குலி தெரிவிப்பு

Best Blogger Tips
நடிகர் ஷாருக்கானுடன் எந்தவித மோதலுமில்லையென இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலி முதல் 3 ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியிலும் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடினார். சமீபத்தில் நடந்த 4ஆவது ஐ.பி.எல் போட்டியில் கங்குலியை கொல்கத்தா அணி உட்பட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
போட்டி முடியும் தருவாயில் புனே வாரியர்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. ஒரு சில போட்டிகளில் அவர் ஆடினார். கங்குலியை கொல்கத்தா அணியில் சேர்க்காததால் அவரது ரசிகர்கள் ஷாருக்கான் மீது ஆத்திரமடைந்து அவருக்கெதிராக போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக ஷாருக்கானுடன் கங்குலி கருத்து வேறுபாடுடனிருந்து வந்ததாக கூறப்பட்டது. இதை கங்குலி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஷாருக்கானுடன் எனக்கு எந்தவித மோதலும் இல்லை. எங்களுக்குள் மோதல் இருப்பதாக தவறான தகவல்கள் எங்கிருந்து வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை .இது முற்றிலும் தவறானது, வதந்தியே ஷாருக்கான் எனது மூத்த சகோதரரை போன்றவர். அவருடனான எனது நட்பு தொடர்ந்துமிருந்து வருகிறதென்றார்.
News:Lankasri

பெடரரை சந்தித்தார் சச்சின்: சுவாரஸ்யமாக பேசி மகிழ்ந்தனர்

Best Blogger Tips
கிரிக்கட் ஜ‌ா‌ம்பவா‌ன் ச‌‌‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், டெ‌ன்‌னி‌ஸ் ‌வீர‌ர் ரோஜ‌ர் பெடரரை ச‌ந்‌‌தி‌த்து பே‌சினா‌ர்.
விம்பிள்டன் ஆட்டத்தை பார்க்க தனது மனை‌வி அ‌ஞ்ச‌லியுட‌ன் இ‌ந்‌திய ‌கி‌‌ரி‌க்க‌ட் ‌வீர‌ர் ச‌ச்‌சி‌ன் ல‌ண்ட‌ன் செ‌ன்று‌ள்ளா‌ர். நே‌ற்று மு‌‌ன்‌தின‌ம் நட‌ந்த உலகின் 3 ம் நிலை வீரரும், அதிகபட்சமாக 16 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், டேவிட் நல்பாண்டியனை வீழ்த்தி 4 வது சுற்றுக்கு முன்னேறிய ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்தார்.
இந்த ஆட்டம் முடிந்ததும் ச‌ச்‌சி‌ன், ரோஜர் பெடரரை சந்தித்து அளவளாவினார். இருவரும் சுமார் 1 மணி நேரம் சுவாரஸ்யமாக பேசி மகிழ்ந்தனர். டென்னிஸ் ஆட்டம் குறித்து பெரடரிடம் ச‌ச்‌சி‌ன் விசாரித்தார். இதேபோல் கிரிக்கட் குறித்து பெடரர், ச‌ச்‌சி‌னிடம் கேட்டு அறிந்தார். விம்பிள்டன் பட்டத்தை வெல்ல வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சந்தித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இருவரும் ஒன்றாக உணவும் அருந்தினார்கள். ரோஜர் பெடரருடனான தனது சந்திப்பு குறித்து ச‌ச்‌சி‌ன் டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பெடரர் பணிவான, பண்பான வீரர் ஆவார். அவர் கிரிக்கட் குறித்து நிறைய விடயங்களை தெரிந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ச‌ச்‌சினை சந்தித்தது குறித்து ரோஜர் பெடரர் தனது பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு இருக்கிறார். அதில், இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். நல்பாண்டியனுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதேநேரத்தில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றேன் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
News:Lankasri

Friday, June 24, 2011

லலித்மோடி தெரிவித்த கருத்துகளுக்கு பி.சி.சி.ஐ. தலைவர் பதிலளிக்க மறுப்பு

Best Blogger Tips
இந்திய கிரிக்கட் வாரியம் குறித்து லலித் மோடி தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்று சஷாங்க் மனோகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரிமியர் லீக் தொடருக்குப் பின்னணியில் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி இருப்பதால் தான், இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. தடை விதித்தது. பி.சி.சி.ஐ. புகாரை மறுத்த, பதவி நீக்கம் செய்யப்பட்ட லலித் மோடி கூறுகையில், கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கட் லீக் அமைப்பை நசுக்குவதற்கு, நான் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அமைத்தது.
பி.சி.சி.ஐ. சார்பில், பிற அனைத்து கிரிக்கட் வாரியங்களையும் தங்களுக்கு ஆதரவாக செயல்படச் செய்தனர். அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என கடுமையாக குற்றம் சுமத்தினார். லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டு குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங்க் மனோகர் கூறியது, லலித் மோடிக்கு தர வேண்டிய அவசியம் இல்லை. அவரது கருத்துக்களைக் கேட்கும் போது, கேலிக்கூத்தாக உள்ளது. அவர் தனது பேச்சின் மூலம் ஊடகங்களை மயக்க பார்க்கலாம். என்னை மயக்க முடியாது.
மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தேசிய விளையாட்டு வளர்ச்சி மசோதாவில், என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, இதுவரையிலும் எங்களுக்குத் தெரியாது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சஷாங்க் மனோகர் தெரிவித்தார்.
இதனிடையே இப்பிரச்சினையில் தலையிட்டுள்ள இலங்கை விளையாட்டு அமைச்சர் அலுத்கமாகே கூறுகையில், பி.சி.சி.ஐ.யுடன் எங்களுக்கு நல்ல நட்புறவு உள்ளது. இதனால் வீரர்கள் பிரச்சினையில் விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக எங்கள் கிரிக்கட் நிர்வாகிகள், பி.சி.சி.ஐ. மூத்த நிர்வாகிகளை சந்தித்து, இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதி வாங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
News:Lankasri

பாகிஸ்தான் அணியில் மீண்டும் விளையாட விரும்புகிறேன்: ஷாகித் அப்ரிதி

Best Blogger Tips
அணி நிர்வாகத்திலும், வாரியச் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் விரைவில் ஏற்படும் என்று பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். 
வாரியத்தின் செயல்பாடுகளை பொறுத்து தானும் விரைவில் சர்வதேச கிரிக்கட்டிற்குத் திரும்புவேன் என்று மேலும் தெரிவித்தார். இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கட் அணியான ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாடச் சென்றுள்ள அப்ரிதி தனது சர்வதேச கிரிக்கட் இன்னமும் முடிந்து விடவில்லை என்று கூறினார்.
ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கு சென்று விளையாடினாலும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கட் வீரராகவே நான் அங்கீகரிக்கப்படுகிறேன் எனவே நான் அங்கு நன்றாக விளையாடினால் அது பாகிஸ்தான் கிரிக்கட்டிற்குத்தான் பெருமை சேர்க்கும்.
நான் பாகிஸ்தானுக்கு மீண்டும் விளையாட விரும்புகிறேன். நான் இன்று இருக்கிறேன் என்றால் அது பாகிஸ்தானால் தான். என்னுடைய அடையாளம் என்பது பாகிஸ்தான் வீரர் என்பதில் தான் உள்ளது. அதனை விட எனக்கு வேறொன்றும் பெரிது கிடையாது.
எப்போது நிலைமைகள் முன்னேற்றம் அடைகிறதோ நான் மீண்டும் விளையாடுவேன். அதுவரை நிலைமைகள் சரியில்லை என்று பொருள் என்று கூறினார் அப்ரிதி.
News:Lankasri

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றிக்கு போராடுகிறார் ஆஷ்லே யங்

Best Blogger Tips
பல லட்சம் பவுண்டுகள் ஒப்பந்தத்தில் ஆஷ்லே யங், ஓல்டு டிரா போர்டுக்கு நகர்ந்து வந்து உள்ளார்
இந்த புதிய ஒப்பந்தத்தை தொடர்ந்து அந்த அதிரடி வீரர் மான்செஸ்டர் யுனைடெட் அணியை முதல் நிலைக்கு கொண்டு வர கடுமையாக போராட வேண்டி உள்ளது. கடந்த சீசன் பெர்குசனின் அணியான யுனைடெட்டுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.
தங்களது 19 வது லீக் பட்டத்தை பெறுவதற்கு யுனைடெட் காத்து இருக்க வேண்டி உள்ளது. யுனைடெட் அணியில் இடம் பெற்று இருந்த பால்கோல்ஸ் சீய்வின் காரணமாகவும் ஓவன் ஹார் கிரேங்ஸ் காயம் காரணமாகவும் மத்திய களப்பகுதியில் ஒரு இடைவெளி உள்ளது. இருப்பினும் ஆஷ்லே யங் யுனைடெட் அணி வெற்றிக்கு போராட களம் இறங்குகிறார்.
தனது ஆட்டத்திறன் மூலம் யுனைடெட் அணியில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆஷ்லே யங் உறுதியாக உள்ளார். தனக்கு இருக்கும் சவால் தெரியும் என்றும் அந்த சவாலை எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் ஆஷ்லே யங் தெரிவித்தார்.
வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே யுனைடெட்டின் இலக்கு. பல அற்புதமான வீரர்களை அந்த கிளப் உருவாக்கி உள்ளது. வில்லா அணிக்கு யங் 193 ஆட்டங்களில் 39 கோல் குவித்து உள்ளார்.
News:Lankasri

உபுல் தரங்கவுக்கு 3 மாதங்களுக்கு விளையாட தடை : ஐ.சி.சி

Best Blogger Tips
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் (ஐ.சி.சி.) 3 மாத காலத்திற்கு போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளின்போது தடைசெய்யப்பட்ட  ஊக்கமருந்துகளை பயன்படுத்தியமையே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த உலகக் கிண்ணத் தொடரில் மார்ச் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நியூஸிலாந்துடனான அரையிறுதிப் போட்டியின் பின் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் உபுல் தரங்க தோல்வியடைந்ததாக ஐ.சி.சி. இன்று வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Tuesday, June 21, 2011

3 ஆவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு : தொடரை வென்றது இங்கிலாந்து

Best Blogger Tips
இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் முதலாவது டெஸ்ட்டில் வென்ற இங்கிலாந்து  3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியை 1-0 விகிதத்தில் தனதாக்கிக் கொண்டுள்ளது.
இப்போட்டியில் நெருக்கடியான நிலையிலிருந்த இலங்கை அணி பின்னர் பேராடி தோல்வியைத் தவிர்த்துக் கொண்டுள்ளது.
போட்டியின் நான்காவது நாளான நேற்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்இழப்பிற்கு 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  இறுதிநாளான இன்று  இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி முடிவுற்றது.
நேற்று 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அணித்தலைவர் குமார் சங்கக்கார 119 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக  கிறிஸ் ட்ரெம்லெட் தெரிவானார். சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிரசன்ன ஜயவர்தனவும் கிறிஸ்  ட்ரெம்லெட்டும் தெரிவாகினர்.
News:lankasri


ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதிக்காதமைக்கு பின்னனியில் லலித் மோடி?

Best Blogger Tips
இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதற்கு இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) சபை மறுத்தமைக்குக்கு லலித் மோடி விவகாரம் காரணம்  எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரை தளமாகக்கொண்ட சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் எனும் நிறுவனத்திடம் இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்க கிரிக்கெட் சபை) வழங்கியுள்ளது.
சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனத்திற்கும் லலித்மோடிக்கும் தொடர்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை சந்தேகிப்பதாலேயே  ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.பீ.எல். முன்னாள் தலைவரான லலித்மோடி இப்போது பிசிசிஐயினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'இலங்கை லீக்கின் பின்னால் மோடி இருப்பதற்கான அறிகுறிகளை நாம் கண்டுள்ளோம். ஐ.பி.எல்.லில் பணியாற்றிய அவரின் நபர்கள் பலர் இப்போது சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் (எஸ்.ஈ.வி.) நிறுவனத்தின் ஊடக இலங்கை லீக்கை நிர்வகிக்கின்றனர்' என பிசிசிஐ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் சபை நடத்தாமல் எஸ்.ஈ.வி. நிறுவனத்திடம் ஏற்பாட்டுப் பொறுப்பை ஒப்படைத்ததால் இப்போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
News:Lankasri

Sunday, June 19, 2011

முக பொலிவு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷேன் வார்னே

Best Blogger Tips
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக விளையாடியவர்.
41 வயதை கடந்த இவர் கடந்த ஜூன் 2005ல் தனது மனைவியான சிமோன் கல்லாஹனை விட்டு பிரிந்தார். பின்னர் ஹாலிவுட் நடிகையும், இந்திய நாட்டை சேர்ந்த அருண் நய்யாரின் முன்னாள் காதலியுமான எலிசபெத் ஹர்லியுடன்(வயது 46) தனது நட்பை புதுப்பித்து கொண்டார்.
அருணுடனான தனது தொடர்பை முற்றிலுமாக முறித்து விவாகரத்து பெற்று விட்ட ஹர்லி தற்போது நிரந்தரமாக வார்னேவுடன் அவரது வீட்டில் குடியேற உள்ளார்.
இந்நிலையில் தனது காதலிக்கு நிகராக வார்னே தோல் சுருக்கம் நீங்கி முகப்பொலிவு பெறுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி டிவிட்டர் இணையதளத்தில் அவரது ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் வார்னே,"அவ்வாறு எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை" என மறுத்துள்ளார்.
News:Lankasri

சச்சினால்தான் இன்னமும் ஊக்கம் பெறுகிறேன் : ராவிட் பெருமிதம்

Best Blogger Tips
சச்சின் டெண்டுல்கருடன் 19 முறை 100 ரன்களுக்கும் மேல் ஜோடி சேர்ந்து எடுத்துள்ள ராகுல் டிராவிட் இன்னமும் தனக்கு சச்சின் டெண்டுல்கர்தான் ஊக்கத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்."அவரது கடைசி 2- 3 வருடங்கள் அபாரமானது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரும்போது அவர் ஏற்கனவே 6- 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தார். அவர் 1997 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடரில் அணிக்கு கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு ஒரு பெரும் கிரியா ஊக்கியாக இருந்தார். இன்றளவிலும் அதில் மாற்றமில்லை" என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் திராவிட் 150 போட்டிகளில் 52.44 என்ற சராசரியுடன் இதுவரை 12,063 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 10 டெஸ்ட் அணிகளுக்கு எதிராகவும் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

தற்போது தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட் இருப்பது பற்றி தெரிவித்த ராகுல் திராவிட், அதற்கு முழு மூச்சுடன் தயார் செய்து வருவதாகத் தெரிவித்தார். 

"நான் போதுமான அளவுக்கு விளையாடியிருக்கிறேன் என்றாலும் இன்னமும் அழுத்தம் உள்ளது, இன்னமும் நடுக்கம் உள்ளது, வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் கலக்குகின்றன. இவையெல்லாம் மாறதவை. துவக்கத்தில் ரன்களை எடுக்கத் தொடங்கி ஃபார்மை அப்படியே தொடரவேண்டும். 

தோனி போன்ற ஒரு கேப்டனை இந்திய அணி பெற்றது அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும் எந்த நெருக்கடியிலும் அவர் கூலாக இருப்பது அவரது அபாரமான குணாதிசயம். 

சபைனா பார்க் மைதானத்தில் சுனில் கவாஸ்கர் சதங்களை எடுப்பதை வானொலி வர்ணனையில் கேட்கும்போது நாமும் இந்த மண்ணில் விளையாட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அதுவும் அந்த பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர் விளையாடியபோது நாமும் இங்கு விளையாட வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
News:Lankasri

பிசிசிஐ தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிர்ச்சி

Best Blogger Tips
ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக்  போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை என்ற இந்திய கிரிக்கெட் சபையின் (பிசிசிஐ) தீர்மானம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் சபை) இது குறித்து நாளை கலந்துரையாடவுள்ளது.
'நாளை திங்கட்கிழமை இவ்விடயம் குறித்து இடைக்கால நிர்வாகக் குழு கலந்துரையாடும். இந்நிலைமையை நாம் ஆராய வேண்டியிருப்பதால் இது குறித்து இப்போதே கருத்துக்கூறுவது கால முதிர்ச்சியற்றதாகும்' என ஸ்ரீலங்ன் கிரிக்கெட் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கூறியுள்ளார்.
இலங்கை மாகாண அணிகளுக்கிடையிலான இப்போட்டிகளில் 12 இந்திய வீரர்கள் விளையாடவிருந்தனர்.
பிரவீன் குமார், முனாவ் பட்டேல், இர்பான் பதான், தினேஸ் கார்த்திக், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, சௌரப் திவாரி, உமேஸ் யாதவ், வினய் குமார், மனிஷ் பான்டே, போல் வால்தாட்டி ஆகியோரே இவ்வீரர்கள்.
இவர்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற சான்றிதழை வழங்க இந்திய கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
இப்போட்டிகள் இலங்கை கிரிக்கெட் சபையினால் அல்லாமல் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் எனும் தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் நிறுவனமானது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் கிளையாகும் என நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜூலை 19 முதல் ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரை இப்போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
News:Lankasri

இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களுக்கு தடை

Best Blogger Tips
இலங்கை கிரிக்கட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடக் கூடாது என்று இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கட் வாரியம் தடை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கட் வாரியத்தின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் பிரபலமாக திகழ்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்கள் முட்டி மோதுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கட் வாரியம் திடீரென உத்தரவு போட்டதால் இலங்கை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஐபிஎல் போட்டிகளி்ல் விளையாடினால் நல்ல பணம்  கிடைக்கும் என்பதால் அதிலிரு்நது விலகி வர அவர்களுக்கு மனமில்லை. இருப்பினும் கிரிக்கட் வாரியத்தின் முரண்டால் அவர்கள் கிளம்பிச் செல்ல நேரிட்டது. ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் இலங்கை திரும்பிய வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் சரியான அடி வாங்கி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை விடுவிக்க இந்திய கிரிக்கட் வாரியம் அதிருப்தி தெரிவித்ததால் கடுப்பான இலங்கை கிரிக்கட் வாரியம், ஐபிஎல்லுக்குப் போட்டியாக இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்திய கிரிக்கட் வாரியம் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு விட்டது.
இதுகுறித்து இந்திய கிரிக்கட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை அந்த நாட்டு கிரிக்கட் வாரியம் நடத்தவில்லை. மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் இதை நடத்தவுள்ளார். எனவே அதிகாரப்பூர்வமற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனியார்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் நமது வீரர்களை அனுப்புவதில்லை என்பது இந்திய கிரிக்கட் வாரியத்தின் கொள்கை முடிவாகும். எனவே இந்திய கிரிக்கட் வாரியம் அனுமதித்தால் மட்டுமே இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் பங்கேற்க முடியாது. எங்களது முடிவை ஏற்கனவே இலங்கை கிரிக்கட் வாரியத்திற்குத் தெரியப்படுத்தி விட்டோம் என்றார் அவர்.
இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 19 ம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 4 ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் பிரவீண் குமார், முனாப் படேல், அஸ்வின் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கட் வாரியம் தடைபோட்டு விட்டது.
News:lankasri

Friday, June 17, 2011

அப்ரிதிக்கு ரூ. 45 லட்சம் அபராதம்

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.பி.,) விதியை மீறி செயல்பட்ட அப்ரிதிக்கு, ரூ. 45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அப்ரிதி, பி.சி.பி., நிர்வாகிகளை விமர்சித்தார். இதனால் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இவருக்கு, வெளிநாடுகளில் விளையாட வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழையும் பி.சி.பி., திரும்பப் பெற்றது. 
இதை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்த அப்ரிதி, பிறகு நடந்த சமாதான முயற்சிக்குப் பின், வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க மறுத்தார். இதையடுத்து, மூன்று நபர்கள் அடங்கிய பி.சி.பி.,யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் முன்பு, நேற்று அப்ரிதி ஆஜராகி விளக்கம் அளித்தார். 
இதன் முடிவில் அப்ரிதிக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 45 லட்சம் (இந்திய ரூபாயில் 23.75 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து பி.சி.பி.,யின் சட்ட ஆலோசகர் தபாஜுல் ரிஜ்வி கூறுகையில்,"" கிரிக்கெட் போர்டின் விதிகளை மீறிய அப்ரிதிக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க, கமிட்டி பரிந்துரை செய்துள்ளது, என்றார்.
தீர்ப்பு குறித்து அப்ரிதி கூறுகையில்,"" தற்போதைய நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து எதுவும் நினைக்கவில்லை. ஆனால் இங்கிலாந்தின் ஹாம்சையர் அணிக்காக போட்டிகளில் பங்கேற்பேன், என்றார்.
------

கிறிஸ் கெய்லின் கிரிக்கட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரியம் முயற்சி

Best Blogger Tips
ஏப்ரல் மாதம் வானொலிக்கு பேட்டி அளித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரியத்தின் மீது விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை பழி வாங்கி வருகிறது.
மேலும் அவரது சர்வதேச கிரிக்கட் வாழ்வையே ஒழித்துக் கட்ட முயற்சி செய்வதாகவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரிய வாட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வீரர்கள் சங்கத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரியத்திற்கும் இடையே கிறிஸ் கெய்ல் எதிர்காலம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
கெய்ல் கொடுத்த வானொலி பேட்டி விவகாரத்தில் அவர் தன் பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் அதன் பிறகு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகே மன்னித்து கெய்லை ஏற்றுக் கொள்வார்களாம். இது வீரர்கள் சங்கத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள செய்தியாகும். ஆனால் இப்போதைக்கு கெய்ல் விடயத்தில் பிரகாசமாக எதுவும் இல்லை என்று ஏமாற்றத்துடன் தெரிவித்துள்ளது வீரர்கள் சங்கம்.
உடல் நிலைத் தகுதிக்காக பயிற்சியில் உள்ள ஒருவரை எந்த வித காரணத்தையும் அறிவிக்காமல் அணியில் தெரிவு செய்யாமல் இருந்தார்கள். அப்போது ஐபிஎல் அணியான ரோயல் சாலஞ்சர்ஸ் அணியிலிருந்து அழைப்பு வர அவர் இந்தியா வந்து விடுகிறார். இதில் கெய்லின் தவறு என்ன என்று தெரியவில்லை. மேலும் இதன் பிறகே அவர் ஜமைக்கா வானொலிக்கு பேட்டியளித்து வாரியம், பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் மீது புகார்களை அடுக்கினார்.
குறிப்பாக ராம் நரேஷ் சர்வாணை பயிற்சியாளர் கிப்சன் பாடாய்படுத்தி அவரது தன்னம்பிக்கையையே இழக்கச் செய்துள்ளார் என்று கூறினார். அவர் கூறியதன் மீதான நடவடிக்கையை பயிற்சியாளரைக் கண்காணிப்பதில் திருப்பாத வாரியம் கிறிஸ் கெய்லை மண்டியிட அழைக்கிறது.
இந்தப் பேச்சையெல்லாம் தற்போது அசை போட்டுக் கொண்டிருக்கும் வாரிய நிர்வாகிகள் கெய்லின் கிரிக்கட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அவுஸ்ட்ரேலிய கிரிக்கட் வாரியம் ஆண்ட்ரூ சைமண்ட்சைச் செய்தது போலவே கிறிஸ் கெய்லையும் செய்து விட தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன
News:Lankasri

ரொனால்டோவுடன் மோதும் மாட்ரிட் கோல்கீப்பர்

Best Blogger Tips
ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் கோல்கீப்பர் இகெர் காசிலாஸ் தனது அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கடுமையாக மோதி விவாதம் செய்கிறார்.
ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோ நல்ல நண்பராக இருந்தாலும் அவருடன் கடுமையாக விவாதம் செய்கிறேன். என் நண்பர் என்று அவரைச் சொன்னாலும், என்னுடைய எதிரியும் அவர் தான் என்கிறார் இகெர்.
கடந்த சீசனில் ரொனால்டோ 40 கோல்களை அடித்து உள்ளதை இகெர் பாராட்ட தவறவும் இல்லை. கடந்த சீசனில் அனைத்து போட்டிகளில் ரொனால்டோ கோல் குவிப்பு 53 ஆக உள்ளது. இவரது கோல்கள் குவிப்பு கோபாடெல்  ரே டிராபியை மாட்ரிட் அணிக்கு புதிய மேலாளர் ஜோஸ் மவுரினோ வந்துள்ளார். அவரது வருகைக்கு பின்னரே மாட்ரிட் அணியின் தீவிரம் அதிகரித்து உள்ளது.
வீரர்கள் ஆட்டத்திலும் உயர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என இகெர் தெரிவித்தார். மாட்ரிட் அணி இளமையான தனது முதல் கோல் மூலம் கோபாடெல் ரே கோப்பையை வென்றுள்ளது. இதனால் மட்டுமே எங்களுக்கு திருப்தி ஏற்படாது. நாங்கள் அதிகம் சாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கோபாடெல் ரே கோப்பை போட்டியில் மாட்ரிட் 1-0 கோல் கணக்கில் பிராகா அணியை வீழ்த்தியது.

Tuesday, June 14, 2011

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் கப்டன் நியமிப்பதில் புதிய அணுகுமுறை

Best Blogger Tips
நியூசிலாந்து கிரிக்கட் அணியின் அடுத்த கப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அணி வீரர்களிடம் அந்நாட்டு கிரிக்கட் வாரியம் கருத்துகளைக் கேட்டுள்ளது.
உலகக் கோப்பைக்குப் பின் நியூசிலாந்து அணியின் கப்டன் பொறுப்பிலிருந்து டேனியல் வெட்டோரி விலகிவிட்டார். இதையடுத்து கப்டன் பதவிக்கு பிரென்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இவர்களில் யாரை கப்டனாக நியமிக்கலாம் என்று கருத்துக் கூறுமாறு 20 முன்னணி கிரிக்கட் வீரர்களிடம் அணி நிர்வாகத்தினர் கருத்து கேட்டுள்ளனர். பொதுவாக அணியின் வீரர்கள், கப்டன் ஆகியோரை நிர்வாகம் தான் தேர்ந்தெடுக்கும்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கப்டனை நியமிப்பது குறித்து வீரர்களிடம் வெளிப்படையாகக் கருத்துக் கேட்டிருப்பது புதிய அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
News:Lankasri

கப்டன் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல: ஆம்லா

Best Blogger Tips
கப்டன் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல என தென் ஆப்ரிக்க அணியின் துணைக் கப்டன் ஆம்லா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின், தென் ஆப்ரிக்க அணியின் ஒருநாள் மற்றும் "டுவென்டி 20" போட்டிகளுக்கான கப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் விலகினார். இதனால், ஒருநாள் மற்றும் "டுவென்டி 20" போட்டிகளுக்கு டிவிலியர்ஸ் புதிய கப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். துணைக் கப்டனாக ஹசிம் ஆம்லா அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆம்லா கூறியதாவது, தென் ஆப்ரிக்க அணியின் கப்டன் பொறுப்புக்கு டிவிலியர்ஸ் மிகவும் தகுதியானவர். கப்டன் பதவி என்பது சாதாரன வி்டயமல்ல. இதற்கு நிறைய பொறுப்புகள், கடமைகள் உள்ளன. எனவே இப்பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. துணைக் கப்டன் பதவி போதுமானதாக கருதுகிறேன்.
ஸ்மித் கப்டன் பொறுப்பில் இருந்து விலகியவுடன், நான் கப்டனாக நியமிக்கப்படலாம் என ஊடகங்களில் கருத்து வெளியாகின. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் தற்போது எனது கவனம் முழுவதையும் துடுப்பாட்டத்தில் செலுத்தியுள்ளேன். இதன்மூலம் "டுவென்டி 20" போட்டிகளில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.
அடுத்து வரும் நாட்களில் நிறைய "டுவென்டி 20" மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, வரும் 2015 ல் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் சாதிக்க விரும்புகிறேன் என்று ஆம்லா தெரிவித்தார்.
News:Lankasri

பயிற்சியாளர் கிரெக் சாப்பல் காலக்கட்டம் மிகுந்த ஏமாற்றம் தந்தது: ஜாகீர்கான்

Best Blogger Tips
தனது 10 ஆண்டுகால கிரிக்கட் வாழ்வில் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் காலக்கட்டம் தான் மிகுந்த ஏமாற்றம் தந்ததாகும் என்று இந்திய இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் சிறப்பு பேட்டி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார். அதாவது, உங்களை ஏதோ ஒன்றில் மாட்டி விடும் சூழ்நிலை நிலவியது. அதாவது நீ இந்த அணியில் தேவையில்லை, உன்னுடைய ஆட்டம் காரணமல்ல ஆனால் உன்னுடைய அணுகுமுறையே காரணம், உன்னுடைய அணுகுமுறை எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்திய அணியின் வளர்ச்சியை நீ தடுக்கிறாய் என்று அவர் என்னிடம் கூறுவது போன்ற சூழ்நிலை இருந்தது.
இலங்கைத் தொடருக்குப் பிறகு நான் நேரடியாக அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். இத்தனைக்கும் இலங்கை தொடரில் நான் அவ்வளவு மோசமாக விளையாடவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா சென்று ஆசிய அணியில் இடம்பெற்று விளையாடியது எனது அதிர்ஷ்டம்.
நான் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். உடனேயே நான் அணியில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டேன். ஆனாலும் அந்தக் காலக்கட்டம் போராட்டமாகவே இருந்தது. அணியின் உள்ளுக்குள்ளேயே ஒருவர் போராட வேண்டியிருப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்தப் போராட்டத்தில் ஒரு தனிப்பட்ட வீரர் வெற்றி பெறுவது கடினம்.
ஆனால் கேரி கிறிஸ்டன் ஒரு பயிற்சியாளர் அல்ல அவர் எங்களது நண்பர். அனைவருக்கு உரிய இடத்தை அவர் வழங்கினார். அவருக்கு இந்தியப் பண்பாடு தெரிந்திருந்தது. நாம் எவ்வாறு விடயங்களை யோசிக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார். எங்களிடம் நெருங்கும் உத்தியை அவர் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

Text Widget

Text Widget