Pages

Saturday, October 29, 2011

9 விக்கெட்டுகளால் இலங்கையை வென்றது பாகிஸ்தான் அணி

Best Blogger Tips
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
துபாயில் நடைபெற்ற  இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 239 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 403 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் 3 ஆவது நாளான  நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்த  இலங்கை அணி நான்காவது   நாளான இன்று சனிக்கிழமை 257 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை ஐந்தாவது நாள் ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றி தவிர்க்கப்பட முடியாது என்பது  வெளிப்படையாகியது. எனினும் இன்று குறைந்தபட்சம் 23 ஓவர்கள எஞ்சியிருந்த நிலையில் இன்றே வெற்றி இலக்கை அடையத் தீர்மானித்த பாகிஸ்தான் அணி வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முற்பட்டது.
தௌபீக் உமர் ஒரு ஓட்டத்துன் ஆட்டமிந்த போதிலும்   மொஹமட் ஹாபிஸும் அஸஹார்அலியும் மேலதிக விக்கெட்  இழப்பை தடுத்து  பாகிஸ்தன் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
24.1 ஓவர்களில்  ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து இந்த இலக்கை அடைந்தது பாகிஸ்தான் அணி.
இரண்டாவது இன்னிங்ஸில்  இலங்கை அணி சார்பில் ஆரமபத் துடுப்பாட்ட தரங்க பரணவிதான 72 ஓட்டங்களையும்  ஏஞ்சலோ மத்திவ்ஸ் 52 ஓட்டங்களையும் பெற்றனர். தம்மிக பிரசாத் 33 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 30 ஓட்டங்களையும் பெற்றனர்.  ரங்கன ஹேரத் 15 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் இரண்டு இலக்க ஓட்ட எண்ணிக்கையைப் பெறவில்லை.
லஹிரு திரிமான்ன (8), மஹேல ஜயவர்தன (5)  திலகரட்ன தில்ஷான் (3) கௌஷல் சில்வா (8) சானக வெலகெதர (4), சுரங்க லக்மால் (8), ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சயீட்அஜ்மல் 68 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜுனைத் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்  அப்துர் ரஹ்மான் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஹாபிஸ் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மொஹமட் ஹாபிஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் அஸார் அலி ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கைப் பந்துவீச்சாளர்களில் ரங்கன ஹேரத் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
சயீட் அஜ்மல் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி 1-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget