Pages

Tuesday, October 4, 2011

அரையிறுதிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ்? : இன்று பலப்பரீட்சை

Best Blogger Tips
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனினும் இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் நியூ செளத் வேல்ஸ் அணியுடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும்.
அதே நேரத்தில் மற்றொரு லீக் போட்டியில் டிரினிடாட் அணியிடம் கேப் கோப்ராஸ் தோல்வியடைய வேண்டும். அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு ஏற்படும். இல்லையெனில் தொடரில் இருந்து சூப்பர் கிங்ஸ் வெளியேறும்.
ஏனெனில் இதுவரை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று, ஏ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. நிகர ரன் ரேட் -0.181. சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரண்டு லீக் ஆட்டங்களும் சென்னைக்கு மிக முக்கியமானது.
முதல் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் - டிரினிடாட் அணிகள் மோதுகின்றன. இதில் கேப் கோப்ராஸ் தோல்வியடைய வேண்டும். அடுத்த போட்டியில் சென்னை அணி நியூ செளத் வேல்ஸ் அணியை வெல்ல வேண்டும்.
அப்போது முதலிடத்தில் உள்ள மும்பை அணி 5 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். சூப்பர் கிங்ஸ், நியூசெளத் வேல்ஸ், டிரினிடாட் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் இதில் ஓர் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதிலும் டோனியின் அணிக்கு சிக்கல் இருக்கிறது. நியூ செளத் வேல்ஸ், டிரினிடாட் அணிகள் இப்போது சென்னையைவிட அதிகமாக ரன் ரேட்டை கொண்டுள்ளது. எனவே சென்னை அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியதும் கட்டாயம்.
மாறாக டிரினிடாட் அணி கேப் கோப்ராஸ் அணியிடம் தோல்வியடைந்தால், சென்னை உடனடியாக அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும். அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பலனிருக்காது.
கோப்ராஸ், நியூசௌத் வேல்ஸ் அணிகள் வென்றால், நியூசெளத் வேல்ஸ் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். மும்பை, கோப்ராஸ் அணிகள் 5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் ஓர் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
டிரினிடாட், நியூசெளத் வேல்ஸ் அணிகள் வென்றால் ரன் ரேட் கணக்கீடு இருக்காது. மும்பையும், நியூசெளத் வேல்ஸ் அணியும் அரையிறுதிக்கு வரும்.

News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget