Pages

Tuesday, June 28, 2011

2015 ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கட் போட்டி: 14 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவிப்பு

Best Blogger Tips
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015 ம் ஆண்டு கிரிக்கட் உலகக் கோப்பை போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
முன்னதாக முதல் தர 10 அணிகள் மட்டுமே 2015 ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வீரர்கள் தரப்பிலிருந்தும் சிறிய அணிகளின் வாரியங்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து இந்த ஆண்டுக் கூட்டத்தில் அது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவர் ஷரத்பவார் 2015 உலகக் கோப்பை கிரிக்கட்டிற்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் பற்றி விவாதிக்கவேண்டும் என்று செயற்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

உலகக் கோப்பை வெல்வது எனது கனவு அல்ல: மெஸ்சி

Best Blogger Tips
அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி, கோபா அமெரிக்கா கோப்பையை வெல்வதே தனது கனவு என்று கூறியுள்ளார்.
அர்ஜென்டினா அணிக்கு நீண்ட காலமாக கோபா கோப்பை கனவாகவே இருந்து வருகிறது. தனது நாட்டிற்கு கோப்பை வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்று மெஸ்சி கூறினார்.
1993 ம் ஆண்டிலிருந்து அர்ஜென்டினா அணிக்கு கோபா அமெரிக்க கோப்பை கனவாகவே உள்ளது. கோபா அமெரிக்க கோப்பை போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்காவை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 1916 ம் ஆண்டு முதல் இந்த சர்வதேச போட்டி நடைபெறுகிறது. கோபா அமெரிக்காவில் அர்ஜென்டினா இறுதியாக 1993 ம் ஆண்டு தான் சாம்பியன் ஆகி இருந்தது. மெஸ்சி போன்ற உலகின் தலைச்சிறந்த வீரர்கள் இருந்த போதும், அர்ஜென்டினா அணி கோபா கோப்பையில் சமீப ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
அர்ஜென்டினா மக்களும், பார்சிலோனா மக்களும் தன்னை பெரிதும் போற்றுகின்றனர். இருப்பினும் துரதஷ்டவசமாக கோபா அமெரிக்க கோப்பை பெற முடியாத நிலை உள்ளது. எனது கனவு உலகக் கோப்பையை வெல்வது அல்ல. கோபா அமெரிக்க கோப்பையை வெல்வது தான் எனது லட்சியக் கனவு என்றும் மெஸ்சி தெரிவித்தார்.
News:Lankasri

Monday, June 27, 2011

ஷாருக்கானுடன் மோதலில்லை : கங்குலி தெரிவிப்பு

Best Blogger Tips
நடிகர் ஷாருக்கானுடன் எந்தவித மோதலுமில்லையென இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலி முதல் 3 ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியிலும் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடினார். சமீபத்தில் நடந்த 4ஆவது ஐ.பி.எல் போட்டியில் கங்குலியை கொல்கத்தா அணி உட்பட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
போட்டி முடியும் தருவாயில் புனே வாரியர்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. ஒரு சில போட்டிகளில் அவர் ஆடினார். கங்குலியை கொல்கத்தா அணியில் சேர்க்காததால் அவரது ரசிகர்கள் ஷாருக்கான் மீது ஆத்திரமடைந்து அவருக்கெதிராக போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக ஷாருக்கானுடன் கங்குலி கருத்து வேறுபாடுடனிருந்து வந்ததாக கூறப்பட்டது. இதை கங்குலி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஷாருக்கானுடன் எனக்கு எந்தவித மோதலும் இல்லை. எங்களுக்குள் மோதல் இருப்பதாக தவறான தகவல்கள் எங்கிருந்து வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை .இது முற்றிலும் தவறானது, வதந்தியே ஷாருக்கான் எனது மூத்த சகோதரரை போன்றவர். அவருடனான எனது நட்பு தொடர்ந்துமிருந்து வருகிறதென்றார்.
News:Lankasri

பெடரரை சந்தித்தார் சச்சின்: சுவாரஸ்யமாக பேசி மகிழ்ந்தனர்

Best Blogger Tips
கிரிக்கட் ஜ‌ா‌ம்பவா‌ன் ச‌‌‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், டெ‌ன்‌னி‌ஸ் ‌வீர‌ர் ரோஜ‌ர் பெடரரை ச‌ந்‌‌தி‌த்து பே‌சினா‌ர்.
விம்பிள்டன் ஆட்டத்தை பார்க்க தனது மனை‌வி அ‌ஞ்ச‌லியுட‌ன் இ‌ந்‌திய ‌கி‌‌ரி‌க்க‌ட் ‌வீர‌ர் ச‌ச்‌சி‌ன் ல‌ண்ட‌ன் செ‌ன்று‌ள்ளா‌ர். நே‌ற்று மு‌‌ன்‌தின‌ம் நட‌ந்த உலகின் 3 ம் நிலை வீரரும், அதிகபட்சமாக 16 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், டேவிட் நல்பாண்டியனை வீழ்த்தி 4 வது சுற்றுக்கு முன்னேறிய ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்தார்.
இந்த ஆட்டம் முடிந்ததும் ச‌ச்‌சி‌ன், ரோஜர் பெடரரை சந்தித்து அளவளாவினார். இருவரும் சுமார் 1 மணி நேரம் சுவாரஸ்யமாக பேசி மகிழ்ந்தனர். டென்னிஸ் ஆட்டம் குறித்து பெரடரிடம் ச‌ச்‌சி‌ன் விசாரித்தார். இதேபோல் கிரிக்கட் குறித்து பெடரர், ச‌ச்‌சி‌னிடம் கேட்டு அறிந்தார். விம்பிள்டன் பட்டத்தை வெல்ல வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சந்தித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இருவரும் ஒன்றாக உணவும் அருந்தினார்கள். ரோஜர் பெடரருடனான தனது சந்திப்பு குறித்து ச‌ச்‌சி‌ன் டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பெடரர் பணிவான, பண்பான வீரர் ஆவார். அவர் கிரிக்கட் குறித்து நிறைய விடயங்களை தெரிந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் ச‌ச்‌சினை சந்தித்தது குறித்து ரோஜர் பெடரர் தனது பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு இருக்கிறார். அதில், இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். நல்பாண்டியனுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதேநேரத்தில் இந்தியாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றேன் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
News:Lankasri

Friday, June 24, 2011

லலித்மோடி தெரிவித்த கருத்துகளுக்கு பி.சி.சி.ஐ. தலைவர் பதிலளிக்க மறுப்பு

Best Blogger Tips
இந்திய கிரிக்கட் வாரியம் குறித்து லலித் மோடி தெரிவித்த கருத்துக்களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்று சஷாங்க் மனோகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரிமியர் லீக் தொடருக்குப் பின்னணியில் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி இருப்பதால் தான், இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. தடை விதித்தது. பி.சி.சி.ஐ. புகாரை மறுத்த, பதவி நீக்கம் செய்யப்பட்ட லலித் மோடி கூறுகையில், கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கட் லீக் அமைப்பை நசுக்குவதற்கு, நான் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அமைத்தது.
பி.சி.சி.ஐ. சார்பில், பிற அனைத்து கிரிக்கட் வாரியங்களையும் தங்களுக்கு ஆதரவாக செயல்படச் செய்தனர். அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என கடுமையாக குற்றம் சுமத்தினார். லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டு குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங்க் மனோகர் கூறியது, லலித் மோடிக்கு தர வேண்டிய அவசியம் இல்லை. அவரது கருத்துக்களைக் கேட்கும் போது, கேலிக்கூத்தாக உள்ளது. அவர் தனது பேச்சின் மூலம் ஊடகங்களை மயக்க பார்க்கலாம். என்னை மயக்க முடியாது.
மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தேசிய விளையாட்டு வளர்ச்சி மசோதாவில், என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, இதுவரையிலும் எங்களுக்குத் தெரியாது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சஷாங்க் மனோகர் தெரிவித்தார்.
இதனிடையே இப்பிரச்சினையில் தலையிட்டுள்ள இலங்கை விளையாட்டு அமைச்சர் அலுத்கமாகே கூறுகையில், பி.சி.சி.ஐ.யுடன் எங்களுக்கு நல்ல நட்புறவு உள்ளது. இதனால் வீரர்கள் பிரச்சினையில் விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக எங்கள் கிரிக்கட் நிர்வாகிகள், பி.சி.சி.ஐ. மூத்த நிர்வாகிகளை சந்தித்து, இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதி வாங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
News:Lankasri

பாகிஸ்தான் அணியில் மீண்டும் விளையாட விரும்புகிறேன்: ஷாகித் அப்ரிதி

Best Blogger Tips
அணி நிர்வாகத்திலும், வாரியச் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் விரைவில் ஏற்படும் என்று பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். 
வாரியத்தின் செயல்பாடுகளை பொறுத்து தானும் விரைவில் சர்வதேச கிரிக்கட்டிற்குத் திரும்புவேன் என்று மேலும் தெரிவித்தார். இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கட் அணியான ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாடச் சென்றுள்ள அப்ரிதி தனது சர்வதேச கிரிக்கட் இன்னமும் முடிந்து விடவில்லை என்று கூறினார்.
ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கு சென்று விளையாடினாலும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கட் வீரராகவே நான் அங்கீகரிக்கப்படுகிறேன் எனவே நான் அங்கு நன்றாக விளையாடினால் அது பாகிஸ்தான் கிரிக்கட்டிற்குத்தான் பெருமை சேர்க்கும்.
நான் பாகிஸ்தானுக்கு மீண்டும் விளையாட விரும்புகிறேன். நான் இன்று இருக்கிறேன் என்றால் அது பாகிஸ்தானால் தான். என்னுடைய அடையாளம் என்பது பாகிஸ்தான் வீரர் என்பதில் தான் உள்ளது. அதனை விட எனக்கு வேறொன்றும் பெரிது கிடையாது.
எப்போது நிலைமைகள் முன்னேற்றம் அடைகிறதோ நான் மீண்டும் விளையாடுவேன். அதுவரை நிலைமைகள் சரியில்லை என்று பொருள் என்று கூறினார் அப்ரிதி.
News:Lankasri

மான்செஸ்டர் யுனைடெட் வெற்றிக்கு போராடுகிறார் ஆஷ்லே யங்

Best Blogger Tips
பல லட்சம் பவுண்டுகள் ஒப்பந்தத்தில் ஆஷ்லே யங், ஓல்டு டிரா போர்டுக்கு நகர்ந்து வந்து உள்ளார்
இந்த புதிய ஒப்பந்தத்தை தொடர்ந்து அந்த அதிரடி வீரர் மான்செஸ்டர் யுனைடெட் அணியை முதல் நிலைக்கு கொண்டு வர கடுமையாக போராட வேண்டி உள்ளது. கடந்த சீசன் பெர்குசனின் அணியான யுனைடெட்டுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.
தங்களது 19 வது லீக் பட்டத்தை பெறுவதற்கு யுனைடெட் காத்து இருக்க வேண்டி உள்ளது. யுனைடெட் அணியில் இடம் பெற்று இருந்த பால்கோல்ஸ் சீய்வின் காரணமாகவும் ஓவன் ஹார் கிரேங்ஸ் காயம் காரணமாகவும் மத்திய களப்பகுதியில் ஒரு இடைவெளி உள்ளது. இருப்பினும் ஆஷ்லே யங் யுனைடெட் அணி வெற்றிக்கு போராட களம் இறங்குகிறார்.
தனது ஆட்டத்திறன் மூலம் யுனைடெட் அணியில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆஷ்லே யங் உறுதியாக உள்ளார். தனக்கு இருக்கும் சவால் தெரியும் என்றும் அந்த சவாலை எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் ஆஷ்லே யங் தெரிவித்தார்.
வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே யுனைடெட்டின் இலக்கு. பல அற்புதமான வீரர்களை அந்த கிளப் உருவாக்கி உள்ளது. வில்லா அணிக்கு யங் 193 ஆட்டங்களில் 39 கோல் குவித்து உள்ளார்.
News:Lankasri

உபுல் தரங்கவுக்கு 3 மாதங்களுக்கு விளையாட தடை : ஐ.சி.சி

Best Blogger Tips
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் (ஐ.சி.சி.) 3 மாத காலத்திற்கு போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளின்போது தடைசெய்யப்பட்ட  ஊக்கமருந்துகளை பயன்படுத்தியமையே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த உலகக் கிண்ணத் தொடரில் மார்ச் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நியூஸிலாந்துடனான அரையிறுதிப் போட்டியின் பின் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் உபுல் தரங்க தோல்வியடைந்ததாக ஐ.சி.சி. இன்று வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Tuesday, June 21, 2011

3 ஆவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு : தொடரை வென்றது இங்கிலாந்து

Best Blogger Tips
இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும் முதலாவது டெஸ்ட்டில் வென்ற இங்கிலாந்து  3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியை 1-0 விகிதத்தில் தனதாக்கிக் கொண்டுள்ளது.
இப்போட்டியில் நெருக்கடியான நிலையிலிருந்த இலங்கை அணி பின்னர் பேராடி தோல்வியைத் தவிர்த்துக் கொண்டுள்ளது.
போட்டியின் நான்காவது நாளான நேற்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்இழப்பிற்கு 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  இறுதிநாளான இன்று  இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி முடிவுற்றது.
நேற்று 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அணித்தலைவர் குமார் சங்கக்கார 119 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக  கிறிஸ் ட்ரெம்லெட் தெரிவானார். சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிரசன்ன ஜயவர்தனவும் கிறிஸ்  ட்ரெம்லெட்டும் தெரிவாகினர்.
News:lankasri


ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதிக்காதமைக்கு பின்னனியில் லலித் மோடி?

Best Blogger Tips
இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதற்கு இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) சபை மறுத்தமைக்குக்கு லலித் மோடி விவகாரம் காரணம்  எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரை தளமாகக்கொண்ட சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் எனும் நிறுவனத்திடம் இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்க கிரிக்கெட் சபை) வழங்கியுள்ளது.
சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனத்திற்கும் லலித்மோடிக்கும் தொடர்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை சந்தேகிப்பதாலேயே  ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.பீ.எல். முன்னாள் தலைவரான லலித்மோடி இப்போது பிசிசிஐயினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'இலங்கை லீக்கின் பின்னால் மோடி இருப்பதற்கான அறிகுறிகளை நாம் கண்டுள்ளோம். ஐ.பி.எல்.லில் பணியாற்றிய அவரின் நபர்கள் பலர் இப்போது சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் (எஸ்.ஈ.வி.) நிறுவனத்தின் ஊடக இலங்கை லீக்கை நிர்வகிக்கின்றனர்' என பிசிசிஐ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் சபை நடத்தாமல் எஸ்.ஈ.வி. நிறுவனத்திடம் ஏற்பாட்டுப் பொறுப்பை ஒப்படைத்ததால் இப்போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
News:Lankasri

Sunday, June 19, 2011

முக பொலிவு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷேன் வார்னே

Best Blogger Tips
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக விளையாடியவர்.
41 வயதை கடந்த இவர் கடந்த ஜூன் 2005ல் தனது மனைவியான சிமோன் கல்லாஹனை விட்டு பிரிந்தார். பின்னர் ஹாலிவுட் நடிகையும், இந்திய நாட்டை சேர்ந்த அருண் நய்யாரின் முன்னாள் காதலியுமான எலிசபெத் ஹர்லியுடன்(வயது 46) தனது நட்பை புதுப்பித்து கொண்டார்.
அருணுடனான தனது தொடர்பை முற்றிலுமாக முறித்து விவாகரத்து பெற்று விட்ட ஹர்லி தற்போது நிரந்தரமாக வார்னேவுடன் அவரது வீட்டில் குடியேற உள்ளார்.
இந்நிலையில் தனது காதலிக்கு நிகராக வார்னே தோல் சுருக்கம் நீங்கி முகப்பொலிவு பெறுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இது பற்றி டிவிட்டர் இணையதளத்தில் அவரது ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் வார்னே,"அவ்வாறு எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை" என மறுத்துள்ளார்.
News:Lankasri

சச்சினால்தான் இன்னமும் ஊக்கம் பெறுகிறேன் : ராவிட் பெருமிதம்

Best Blogger Tips
சச்சின் டெண்டுல்கருடன் 19 முறை 100 ரன்களுக்கும் மேல் ஜோடி சேர்ந்து எடுத்துள்ள ராகுல் டிராவிட் இன்னமும் தனக்கு சச்சின் டெண்டுல்கர்தான் ஊக்கத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்."அவரது கடைசி 2- 3 வருடங்கள் அபாரமானது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரும்போது அவர் ஏற்கனவே 6- 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தார். அவர் 1997 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடரில் அணிக்கு கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு ஒரு பெரும் கிரியா ஊக்கியாக இருந்தார். இன்றளவிலும் அதில் மாற்றமில்லை" என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் திராவிட் 150 போட்டிகளில் 52.44 என்ற சராசரியுடன் இதுவரை 12,063 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 10 டெஸ்ட் அணிகளுக்கு எதிராகவும் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

தற்போது தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட் இருப்பது பற்றி தெரிவித்த ராகுல் திராவிட், அதற்கு முழு மூச்சுடன் தயார் செய்து வருவதாகத் தெரிவித்தார். 

"நான் போதுமான அளவுக்கு விளையாடியிருக்கிறேன் என்றாலும் இன்னமும் அழுத்தம் உள்ளது, இன்னமும் நடுக்கம் உள்ளது, வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் கலக்குகின்றன. இவையெல்லாம் மாறதவை. துவக்கத்தில் ரன்களை எடுக்கத் தொடங்கி ஃபார்மை அப்படியே தொடரவேண்டும். 

தோனி போன்ற ஒரு கேப்டனை இந்திய அணி பெற்றது அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும் எந்த நெருக்கடியிலும் அவர் கூலாக இருப்பது அவரது அபாரமான குணாதிசயம். 

சபைனா பார்க் மைதானத்தில் சுனில் கவாஸ்கர் சதங்களை எடுப்பதை வானொலி வர்ணனையில் கேட்கும்போது நாமும் இந்த மண்ணில் விளையாட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அதுவும் அந்த பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர் விளையாடியபோது நாமும் இங்கு விளையாட வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
News:Lankasri

பிசிசிஐ தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிர்ச்சி

Best Blogger Tips
ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக்  போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை என்ற இந்திய கிரிக்கெட் சபையின் (பிசிசிஐ) தீர்மானம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட் சபை) இது குறித்து நாளை கலந்துரையாடவுள்ளது.
'நாளை திங்கட்கிழமை இவ்விடயம் குறித்து இடைக்கால நிர்வாகக் குழு கலந்துரையாடும். இந்நிலைமையை நாம் ஆராய வேண்டியிருப்பதால் இது குறித்து இப்போதே கருத்துக்கூறுவது கால முதிர்ச்சியற்றதாகும்' என ஸ்ரீலங்ன் கிரிக்கெட் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கூறியுள்ளார்.
இலங்கை மாகாண அணிகளுக்கிடையிலான இப்போட்டிகளில் 12 இந்திய வீரர்கள் விளையாடவிருந்தனர்.
பிரவீன் குமார், முனாவ் பட்டேல், இர்பான் பதான், தினேஸ் கார்த்திக், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, சௌரப் திவாரி, உமேஸ் யாதவ், வினய் குமார், மனிஷ் பான்டே, போல் வால்தாட்டி ஆகியோரே இவ்வீரர்கள்.
இவர்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற சான்றிதழை வழங்க இந்திய கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
இப்போட்டிகள் இலங்கை கிரிக்கெட் சபையினால் அல்லாமல் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் எனும் தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் நிறுவனமானது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் கிளையாகும் என நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜூலை 19 முதல் ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரை இப்போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
News:Lankasri

இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களுக்கு தடை

Best Blogger Tips
இலங்கை கிரிக்கட் வாரியம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடக் கூடாது என்று இந்திய கிரிக்கட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கட் வாரியம் தடை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கட் வாரியத்தின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் பிரபலமாக திகழ்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க சர்வதேச அளவில் புகழ் பெற்ற வீரர்கள் முட்டி மோதுகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கட் வாரியம் திடீரென உத்தரவு போட்டதால் இலங்கை வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஐபிஎல் போட்டிகளி்ல் விளையாடினால் நல்ல பணம்  கிடைக்கும் என்பதால் அதிலிரு்நது விலகி வர அவர்களுக்கு மனமில்லை. இருப்பினும் கிரிக்கட் வாரியத்தின் முரண்டால் அவர்கள் கிளம்பிச் செல்ல நேரிட்டது. ஐபிஎல் போட்டிகள் முடிந்த நிலையில் இலங்கை திரும்பிய வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்திடம் சரியான அடி வாங்கி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர்களை விடுவிக்க இந்திய கிரிக்கட் வாரியம் அதிருப்தி தெரிவித்ததால் கடுப்பான இலங்கை கிரிக்கட் வாரியம், ஐபிஎல்லுக்குப் போட்டியாக இலங்கை பிரீமியர் லீக் என்ற தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். இந்திய வீரர்கள் பலரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்திய கிரிக்கட் வாரியம் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டு விட்டது.
இதுகுறித்து இந்திய கிரிக்கட் வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை அந்த நாட்டு கிரிக்கட் வாரியம் நடத்தவில்லை. மாறாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் இதை நடத்தவுள்ளார். எனவே அதிகாரப்பூர்வமற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனியார்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் நமது வீரர்களை அனுப்புவதில்லை என்பது இந்திய கிரிக்கட் வாரியத்தின் கொள்கை முடிவாகும். எனவே இந்திய கிரிக்கட் வாரியம் அனுமதித்தால் மட்டுமே இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும். இல்லாவிட்டால் பங்கேற்க முடியாது. எங்களது முடிவை ஏற்கனவே இலங்கை கிரிக்கட் வாரியத்திற்குத் தெரியப்படுத்தி விட்டோம் என்றார் அவர்.
இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 19 ம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 4 ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் பிரவீண் குமார், முனாப் படேல், அஸ்வின் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கட் வாரியம் தடைபோட்டு விட்டது.
News:lankasri

Friday, June 17, 2011

அப்ரிதிக்கு ரூ. 45 லட்சம் அபராதம்

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.பி.,) விதியை மீறி செயல்பட்ட அப்ரிதிக்கு, ரூ. 45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அப்ரிதி, பி.சி.பி., நிர்வாகிகளை விமர்சித்தார். இதனால் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இவருக்கு, வெளிநாடுகளில் விளையாட வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழையும் பி.சி.பி., திரும்பப் பெற்றது. 
இதை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்த அப்ரிதி, பிறகு நடந்த சமாதான முயற்சிக்குப் பின், வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க மறுத்தார். இதையடுத்து, மூன்று நபர்கள் அடங்கிய பி.சி.பி.,யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் முன்பு, நேற்று அப்ரிதி ஆஜராகி விளக்கம் அளித்தார். 
இதன் முடிவில் அப்ரிதிக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 45 லட்சம் (இந்திய ரூபாயில் 23.75 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து பி.சி.பி.,யின் சட்ட ஆலோசகர் தபாஜுல் ரிஜ்வி கூறுகையில்,"" கிரிக்கெட் போர்டின் விதிகளை மீறிய அப்ரிதிக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும், வெளிநாடுகளில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க, கமிட்டி பரிந்துரை செய்துள்ளது, என்றார்.
தீர்ப்பு குறித்து அப்ரிதி கூறுகையில்,"" தற்போதைய நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து எதுவும் நினைக்கவில்லை. ஆனால் இங்கிலாந்தின் ஹாம்சையர் அணிக்காக போட்டிகளில் பங்கேற்பேன், என்றார்.
------

கிறிஸ் கெய்லின் கிரிக்கட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரியம் முயற்சி

Best Blogger Tips
ஏப்ரல் மாதம் வானொலிக்கு பேட்டி அளித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரியத்தின் மீது விமர்சனம் செய்த ஒரே காரணத்திற்காக அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை பழி வாங்கி வருகிறது.
மேலும் அவரது சர்வதேச கிரிக்கட் வாழ்வையே ஒழித்துக் கட்ட முயற்சி செய்வதாகவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரிய வாட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வீரர்கள் சங்கத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரியத்திற்கும் இடையே கிறிஸ் கெய்ல் எதிர்காலம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
கெய்ல் கொடுத்த வானொலி பேட்டி விவகாரத்தில் அவர் தன் பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் அதன் பிறகு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகே மன்னித்து கெய்லை ஏற்றுக் கொள்வார்களாம். இது வீரர்கள் சங்கத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள செய்தியாகும். ஆனால் இப்போதைக்கு கெய்ல் விடயத்தில் பிரகாசமாக எதுவும் இல்லை என்று ஏமாற்றத்துடன் தெரிவித்துள்ளது வீரர்கள் சங்கம்.
உடல் நிலைத் தகுதிக்காக பயிற்சியில் உள்ள ஒருவரை எந்த வித காரணத்தையும் அறிவிக்காமல் அணியில் தெரிவு செய்யாமல் இருந்தார்கள். அப்போது ஐபிஎல் அணியான ரோயல் சாலஞ்சர்ஸ் அணியிலிருந்து அழைப்பு வர அவர் இந்தியா வந்து விடுகிறார். இதில் கெய்லின் தவறு என்ன என்று தெரியவில்லை. மேலும் இதன் பிறகே அவர் ஜமைக்கா வானொலிக்கு பேட்டியளித்து வாரியம், பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் மீது புகார்களை அடுக்கினார்.
குறிப்பாக ராம் நரேஷ் சர்வாணை பயிற்சியாளர் கிப்சன் பாடாய்படுத்தி அவரது தன்னம்பிக்கையையே இழக்கச் செய்துள்ளார் என்று கூறினார். அவர் கூறியதன் மீதான நடவடிக்கையை பயிற்சியாளரைக் கண்காணிப்பதில் திருப்பாத வாரியம் கிறிஸ் கெய்லை மண்டியிட அழைக்கிறது.
இந்தப் பேச்சையெல்லாம் தற்போது அசை போட்டுக் கொண்டிருக்கும் வாரிய நிர்வாகிகள் கெய்லின் கிரிக்கட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அவுஸ்ட்ரேலிய கிரிக்கட் வாரியம் ஆண்ட்ரூ சைமண்ட்சைச் செய்தது போலவே கிறிஸ் கெய்லையும் செய்து விட தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன
News:Lankasri

ரொனால்டோவுடன் மோதும் மாட்ரிட் கோல்கீப்பர்

Best Blogger Tips
ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் கோல்கீப்பர் இகெர் காசிலாஸ் தனது அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் கடுமையாக மோதி விவாதம் செய்கிறார்.
ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோ நல்ல நண்பராக இருந்தாலும் அவருடன் கடுமையாக விவாதம் செய்கிறேன். என் நண்பர் என்று அவரைச் சொன்னாலும், என்னுடைய எதிரியும் அவர் தான் என்கிறார் இகெர்.
கடந்த சீசனில் ரொனால்டோ 40 கோல்களை அடித்து உள்ளதை இகெர் பாராட்ட தவறவும் இல்லை. கடந்த சீசனில் அனைத்து போட்டிகளில் ரொனால்டோ கோல் குவிப்பு 53 ஆக உள்ளது. இவரது கோல்கள் குவிப்பு கோபாடெல்  ரே டிராபியை மாட்ரிட் அணிக்கு புதிய மேலாளர் ஜோஸ் மவுரினோ வந்துள்ளார். அவரது வருகைக்கு பின்னரே மாட்ரிட் அணியின் தீவிரம் அதிகரித்து உள்ளது.
வீரர்கள் ஆட்டத்திலும் உயர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என இகெர் தெரிவித்தார். மாட்ரிட் அணி இளமையான தனது முதல் கோல் மூலம் கோபாடெல் ரே கோப்பையை வென்றுள்ளது. இதனால் மட்டுமே எங்களுக்கு திருப்தி ஏற்படாது. நாங்கள் அதிகம் சாதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கோபாடெல் ரே கோப்பை போட்டியில் மாட்ரிட் 1-0 கோல் கணக்கில் பிராகா அணியை வீழ்த்தியது.

Tuesday, June 14, 2011

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் கப்டன் நியமிப்பதில் புதிய அணுகுமுறை

Best Blogger Tips
நியூசிலாந்து கிரிக்கட் அணியின் அடுத்த கப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அணி வீரர்களிடம் அந்நாட்டு கிரிக்கட் வாரியம் கருத்துகளைக் கேட்டுள்ளது.
உலகக் கோப்பைக்குப் பின் நியூசிலாந்து அணியின் கப்டன் பொறுப்பிலிருந்து டேனியல் வெட்டோரி விலகிவிட்டார். இதையடுத்து கப்டன் பதவிக்கு பிரென்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இவர்களில் யாரை கப்டனாக நியமிக்கலாம் என்று கருத்துக் கூறுமாறு 20 முன்னணி கிரிக்கட் வீரர்களிடம் அணி நிர்வாகத்தினர் கருத்து கேட்டுள்ளனர். பொதுவாக அணியின் வீரர்கள், கப்டன் ஆகியோரை நிர்வாகம் தான் தேர்ந்தெடுக்கும்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கப்டனை நியமிப்பது குறித்து வீரர்களிடம் வெளிப்படையாகக் கருத்துக் கேட்டிருப்பது புதிய அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
News:Lankasri

கப்டன் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல: ஆம்லா

Best Blogger Tips
கப்டன் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல என தென் ஆப்ரிக்க அணியின் துணைக் கப்டன் ஆம்லா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின், தென் ஆப்ரிக்க அணியின் ஒருநாள் மற்றும் "டுவென்டி 20" போட்டிகளுக்கான கப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் விலகினார். இதனால், ஒருநாள் மற்றும் "டுவென்டி 20" போட்டிகளுக்கு டிவிலியர்ஸ் புதிய கப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். துணைக் கப்டனாக ஹசிம் ஆம்லா அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆம்லா கூறியதாவது, தென் ஆப்ரிக்க அணியின் கப்டன் பொறுப்புக்கு டிவிலியர்ஸ் மிகவும் தகுதியானவர். கப்டன் பதவி என்பது சாதாரன வி்டயமல்ல. இதற்கு நிறைய பொறுப்புகள், கடமைகள் உள்ளன. எனவே இப்பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. துணைக் கப்டன் பதவி போதுமானதாக கருதுகிறேன்.
ஸ்மித் கப்டன் பொறுப்பில் இருந்து விலகியவுடன், நான் கப்டனாக நியமிக்கப்படலாம் என ஊடகங்களில் கருத்து வெளியாகின. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் தற்போது எனது கவனம் முழுவதையும் துடுப்பாட்டத்தில் செலுத்தியுள்ளேன். இதன்மூலம் "டுவென்டி 20" போட்டிகளில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.
அடுத்து வரும் நாட்களில் நிறைய "டுவென்டி 20" மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, வரும் 2015 ல் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் சாதிக்க விரும்புகிறேன் என்று ஆம்லா தெரிவித்தார்.
News:Lankasri

பயிற்சியாளர் கிரெக் சாப்பல் காலக்கட்டம் மிகுந்த ஏமாற்றம் தந்தது: ஜாகீர்கான்

Best Blogger Tips
தனது 10 ஆண்டுகால கிரிக்கட் வாழ்வில் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் காலக்கட்டம் தான் மிகுந்த ஏமாற்றம் தந்ததாகும் என்று இந்திய இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் சிறப்பு பேட்டி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார். அதாவது, உங்களை ஏதோ ஒன்றில் மாட்டி விடும் சூழ்நிலை நிலவியது. அதாவது நீ இந்த அணியில் தேவையில்லை, உன்னுடைய ஆட்டம் காரணமல்ல ஆனால் உன்னுடைய அணுகுமுறையே காரணம், உன்னுடைய அணுகுமுறை எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்திய அணியின் வளர்ச்சியை நீ தடுக்கிறாய் என்று அவர் என்னிடம் கூறுவது போன்ற சூழ்நிலை இருந்தது.
இலங்கைத் தொடருக்குப் பிறகு நான் நேரடியாக அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். இத்தனைக்கும் இலங்கை தொடரில் நான் அவ்வளவு மோசமாக விளையாடவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா சென்று ஆசிய அணியில் இடம்பெற்று விளையாடியது எனது அதிர்ஷ்டம்.
நான் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். உடனேயே நான் அணியில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டேன். ஆனாலும் அந்தக் காலக்கட்டம் போராட்டமாகவே இருந்தது. அணியின் உள்ளுக்குள்ளேயே ஒருவர் போராட வேண்டியிருப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்தப் போராட்டத்தில் ஒரு தனிப்பட்ட வீரர் வெற்றி பெறுவது கடினம்.
ஆனால் கேரி கிறிஸ்டன் ஒரு பயிற்சியாளர் அல்ல அவர் எங்களது நண்பர். அனைவருக்கு உரிய இடத்தை அவர் வழங்கினார். அவருக்கு இந்தியப் பண்பாடு தெரிந்திருந்தது. நாம் எவ்வாறு விடயங்களை யோசிக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார். எங்களிடம் நெருங்கும் உத்தியை அவர் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

Saturday, June 11, 2011

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் மீண்டும் புறக்கணிப்பு

Best Blogger Tips
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கப்டன் கிறிஸ் கெய்ல். சிறந்த அதிரடி துடுப்பாட்டக்காரரான இவர் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழுவினரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல் இடம் பெறவில்லை. அதன் பிறகு இந்தியாவில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு றோயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கெய்ல் விளையாடினார். இதில் கெய்ல் சிறப்பாக ஆடி முத்திரை பதித்தார். அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Thursday, June 9, 2011

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இருந்து சனத் ஜயசூரிய ஓய்வு

Best Blogger Tips
இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
444 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 30 இருபது ஓவர் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

ஐ.சி.சி. தடையை மீறி போட்டியில் பங்கேற்றார் முகமது ஆமிர்: தடைக்காலம் அதிகரிக்க வாய்ப்பு

Best Blogger Tips
பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் தடையை மீறி கிரிக்கட் போட்டியில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது பற்றி ஐ.சி.சி. விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவரது தடைக் காலம் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் (19). கடந்த ஆண்டு லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆமிர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகிய 3 பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் நிர்ணயம் எனப்படும் கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆமிர், சூதாட்ட புக்கிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே "நோ பால்" வீசினார். இவர்கள் மூவருக்கும் சர்வதேச கிரிக்கட் வாரியம் (ஐ.சி.சி.) 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தக் காலக் கட்டத்தில் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கக் கூடாது.
இந்தச் சூழலில் இங்கிலாந்தின் சர்ரே கிரிக்கட் லீக் டிவிஷன் போட்டியில், அடிங்டன் அணிக்காக முகமது ஆமிர் விளையாடியது அம்பலமாகியுள்ளது. செயின்ட் லூக் அணிக்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கி 60 ரன்கள் எடுத்தார். பின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, வெற்றி நாயகனாக ஜொலித்தார். இது தொடர்பான செய்தியை லண்டனில் இருந்து வெளியாகும் "டெய்லி மெயில்" பத்திரிக்கை வெளியிட, ஆமிர் வசமாக சிக்கிக் கொண்டார்.
இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கோலின் கிப்சன் கூறுகையில், ஐ.சி.சி. தடை என்பது உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளுக்கும் பொருந்தும். ஆமிர் விவகாரம் பற்றி விசாரித்து வருகிறோம். இச்சம்பவம் உண்மையானால், அது ஐ.சி.சி.யின் தடையை மீறிய செயலாகும் என்றார்.
இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் (இ.சி.பி.) செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த விவகாரம் பற்றி தெரியும். எங்களது கட்டுப்பாட்டின் கீழ் சம்பந்தப்பட்ட போட்டி வருகிறதா என ஐ.சி.சி.யுடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இப்பிரச்னையில் ஆமிர் எதையும் மூடி மறைக்கவில்லை. நட்பு போட்டி என நினைத்து விளையாடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில், போட்டி துவங்குவதற்கு முன் குழு நிர்வாகிகளிடம் பேசினேன். தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நடக்கும் நட்பு ரீதியான போட்டி என்பதால், ஐ.சி.சி. தடையை மீறிய செயலாகாது என்று கூறினர். இங்கிலாந்து கிரிக்கட் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றும் உறுதி அளித்தனர். தடையை மீறி விளையாட நான் ஒன்றும் முட்டாள் அல்ல என்றார்.
அடிங்டன் அணியின் கப்டன் இஜாஸ் கூறுகையில், எங்களது அணிக்கு ஒரு வீரர் குறைவாக இருந்தார். உடனே நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் தான் ஆமிர் பெயரை சொன்னார். லீக் அமைப்பாளர்களிடம் விசாரித்த போது, பிரச்சினை எதுவும் இல்லை என்றனர். கிராம அளவிலான எங்களது அணி வீரர்களின் சொந்த முதலீட்டில் இயங்குகிறது. அதிகாரப்பூர்வ நடுவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. வீரர்களே நடுவர் பணியை செய்வர். எனவே ஆமிர் தடையை மீறியதாக நினைக்கவில்லை. அவருக்கு நாங்கள் சம்பளம் எதுவும் வழங்கவில்லை. ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. போட்டி முழுவதும் அவர் இருக்கவில்லை. நாங்கள் கொடுத்த உறுதியின் அடிப்படையில் தான் விளையாடினார். தவறு ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் (பி.சி.பி.) தலைவர் இஜாஸ் பட் கூறுகையில், இவ்விடயத்தில் ஐ.சி.சி. கேட்டுக் கொண்டால் மட்டுமே தலையிடுவோம் என்றார்.
ஆமிர் இரண்டாவது முறையாக தடையை மீறியுள்ளார். ஏற்கனவே தற்காலிக தடை விதிக்கப்பட்ட காலத்தில் ராவல்பிண்டியின் ஒரு குழு அணிக்காக விளையாடினார். இது பற்றி ஐ.சி.சி. மற்றும் பி.சி.பி. விசாரித்தது. அந்த குழு, ராவல்பிண்டி கிரிக்கட் சங்கத்துடன் பதிவு செய்யப்படாதது மற்றும் அதிகாரப்பூர்வமற்ற போட்டி என்பதால் தப்பினார். தற்போது மீண்டும் சிக்கி இருப்பதால் ஐ.சி.சி. பிடியில் இருந்து ஆமிர் தப்புவது கடினம்.
News: Lankasri

சச்சின் மற்றும் ரோஜர் பெடரர் எனது முன்மாதிரியாக கொண்டுள்ளேன்: பால் வல்தாட்டி

Best Blogger Tips
இந்திய "மாஸ்டர் துடுப்பாட்டக்காரர்" சச்சின், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இருவரும் தனக்கு முன் மாதிரி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் வல்தாட்டி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல். தொடர் நடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இளம் இந்திய வீரர் பால் வல்தாட்டி 14 போட்டியில் ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 463 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக ரன் சேர்க்கும் இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதுகுறித்து வல்தாட்டி கூறியதாவது, நான்காவது ஐ.பி.எல். தொடரில் எனது செயல்பாடு மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய "மாஸ்டர் துடுப்பாட்டக்காரர்" சச்சின் மற்றும் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இருவரையும் எனது முன் மாதிரியாக கொண்டுள்ளேன். இவர்கள் இருவரும் உண்மையான சம்பியன்கள். இவர்களது செயல்பாடு, போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியது.
கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலம் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது எனது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர். இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து வரும் ஐ.பி.எல். தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதிக்க விரும்புகிறேன். எனது வெற்றிக்கு கப்டன் கில்கிறிஸ்ட் தந்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இவர், என்னைப் போன்ற இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். துடுப்பாட்டம் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார்.
ஐ.பி.எல். தொடர் இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் மேடையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொடர் மூலம் நிறைய இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம் பிடிக்கலாம் என்று வல்தாட்டி தெரிவித்தார்.
News: Lankasri

பெரும் நிதிச் சிக்கலில் தவிக்கும் இலங்கை கிரிக்கட் வாரியம்

Best Blogger Tips
இலங்கை கிரிக்கட் வாரியம் தனது பணியாளர்களுக்கு கூட ஊதியம் தர வழியில்லாமல் பெரும் நிதிச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.
இந்தியா, வங்கதேசத்துடன் இணைந்து இலங்கையும், சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடரை நடத்தின. இதற்காக இலங்கையில் அம்பாந்தோட்டை பகுதியில் புதிய மைதானம் கட்டியது மற்றும் கொழும்பு, கண்டியில் இரண்டு மைதானங்களை புதுப்பிப்பதற்காக, 14 கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டது. ஆனால் திட்டமிட்டதை விட அதிகளவு செலவு ஏற்பட்டது. இப்போது இதைச் சரிசெய்ய இலங்கை அரசு அங்குள்ள வங்கிகளை கிரிக்கட் வாரியம் அணுகியுள்ளது.
இதுகுறித்து கிரிக்கட் வாரிய பொருளாளர் சுஜீவா ராஜபக்ஷே கூறுகையில், இலங்கையின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பு, நிதிச்சிக்கலில் சிக்கித் தவிப்பது உண்மை தான். இதற்காக அரசு மற்றும் வங்கிகளை உதவி செய்யுமாறு கேட்டுள்ளோம் என்றார்.
இதுபற்றி இலங்கையில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" என்ற பத்திரிகையில், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலையில் இலங்கை கிரிக்கட் வாரியம் உள்ளது. இந்த சிக்கலில் இருந்து  கிரிக்கட் வாரியத்தை காப்பாற்ற ரூ. 8 கோடி வரை கொடுக்க இலங்கை அரசு முன்வந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் எண்ணிக்கைக்கு ஏற்பத்தான் கட்டணம் வழங்கப்படும். மைதானம் கட்டுவதற்கு ஆகும் செலவுகள் குறித்தெல்லாம் ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றார்.
News:Lankasri

உதைப்பந்தாட்ட செய்தி ரியல் மாட்ரிட் அழைப்பு: ஹெர்னான்டஸ் நிராகரித்தார்

Best Blogger Tips
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் அதிரடி வீரர் ஜாவியர் ஹெர்னான்டஸ் ரியல் மாட்ரிட் அணி அழைப்பை நிராகரித்தார்.
சர் அலெக்ஸ் பெர்குசனின் யுனைடெட் அணிக்கு விசுவாசமாகவே இருப்பேன் என அவர் தெரிவித்தார். ஸ்பெயினில் பிரம்மாண்ட அணியான மாட்ரிட் ஹெர்னான்டசை தங்களது பக்கம் இழுக்க பேரம் செய்து வருகின்றன என்று ஊடகத் தகவல்கள் வெளியாகின.
ஓல்டு டிராபோர்டின் கடந்த கோடைகாலத்தின் 20 கோல்களை அடித்து ஹெர்னான்டஸ் பிரிட்டன் மக்களின் மனங்களை கவர்ந்தார். சிசாரிடோ என அனைவராலும் அறியப்படும் ஹெர்னான்டஸ் 60 லட்சம் பவுண்ட் ஒப்பந்தத்தில் சிவாசில் இருந்து யுனைடெட் கிளப்பிற்கு வந்தார்.
23 வயது ஹெர்னான்டஸ் தனது எதிர்காலம் யுனைடெட்டின் தாயகமான ஓல்டு டிராபோர்டில் தான் இருக்கும் என அவர் தெரிவித்தார். ஐரோப்பாவிற்கு என்னை கொண்டு வந்த பெர்குசனுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். யுனைடெட் கிளப்பில் இருந்து விலகிச் செல்லும் எண்ணமே இல்லை. இந்த முடிவில் மாற்றம் இல்லை என அவர் தெரிவித்தார்.
ஓல்டு டிராபோர்டில் ஹெர்னான்டஸ் தொடர்ந்து ஆட வேண்டும் என்பதற்காக அவருக்கு வார ஊதியம் 3 மடங்கு உயர்த்தப்பட்டு 75 ஆயிரம் பவுண்ட் தரப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. கால்பந்து, கோல்ப் போன்ற விளையாட்டு அல்ல. இது ஒட்டுமொத்த வீரர்களின் ஆட்டம் என அவர் தெரிவித்தார்.

News:Lankasri

Tuesday, June 7, 2011

அப்ரிடி மீதான ஒழுங்கு நடவடிக்கையை தடுக்க முடியாது: பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம்

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து அப்ரிடி  நீக்கப்பட்டார். அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்தது.
இதையடுத்து கிரிக்கட் வாரியத்தை அப்ரிடி கடுமையாக விமர்சித்தார். மேலும் கப்டன் பதவி பறிக்கப்பட்டதால் கிரிக்கட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்தார். இதனால் அப்டிரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்திற்கும் இடையே மோதல் முற்றுகிறது.
அப்டிரிக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் ரத்து செய்தது. அதோடு அவருடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் முடிவு செய்தது. இதையடுத்து அப்ரிடி நாளை 8 ம் திகதி 3 நபர்கள் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. ஆனால் அப்ரிடி ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அப்ரிடியின் வக்கீல் சையத் அலி கபார் கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கட் இதில் சரியான விதியை கடைப்பிடிக்கவில்லை, தனி நபருக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாக உள்ளது என்றார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் கூறுகையில், அப்ரிதி ஓய்வு பெறுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது வீரர்களின் நடத்தை மீறிய செயலாகும். இதற்காகவே அவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கட் விவகாரங்களில் அரசியல் தலையீடு உள்ளது என்றாலும் அப்ரிதி மீதான ஒழுங்கு நடவடிக்கையை யாராலும் தடுக்க முடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.
News:Lankasri

உதவி கேட்டு பாகிஸ்தான் அதிபரின் மகனை சந்தித்த அப்ரிடி

Best Blogger Tips
பாகிஸ்தான் கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அப்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதுடன் வாரியத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையடுத்து அவர் வெளிநாடு மற்றும் உள்ளூர் அணிகளில் விளையாடுவதற்கு கிரிக்கட் வாரியம் சார்பில் வழங்கப்பட்ட தடையில்லா சான்று ரத்து செய்யப்பட்டது.
மேலும் 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு 8ந் திகதி விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவாலை அப்ரிடி லண்டனில் சென்று சந்தித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ்செரீப் ஆதரவையும் கேட்டார்.
அதன்பின் அவர் நேற்று இரவு நாடு திரும்பினார். இதையறிந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றனர். அவரை காரில் அழைத்து ஊர்வலமாக வந்தனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் அப்ரிடிக்கு ஆதரவாக இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது விசாரணையை பாதிக்கும் என கிரிக்கட் வாரிய தலைவர் இஜாஸ்பட் தெரிவித்துள்ளார்.

News:Lankasri

Monday, June 6, 2011

மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டும் சனத் ஜயசூரிய

Best Blogger Tips
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 30 ஆம் திகதி தனது 42 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள சனத் ஜயசூரிய, இறுதியாக 2009 ஆம் ஆண்டு இந்திய அணியுடனான போட்டிகளில் பங்குபற்றினார்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் அவர், இங்கிலாந்துடான ஒருநாள் சுற்றுப்பேட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
444 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஜயசூரிய, உலகக்கிண்ணத் தொடருக்கு தெரிவு செய்யப்படாதமை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'இங்கிலாந்துடனான போட்டிகளில் விளையாட வாய்ப்பளித்தால் நாட்டிற்காக என்னால் முடிந்தளவு சிறப்பாக விளையாடுவேன்' என அவர் கூறியுள்ளார். தான் 18 வயதில் இருந்ததைப் போல் சிறந்த உடல்திட நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்தும் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறுதியாக இலங்கை அணி இங்கிலாந்தில் ஒருநாள் தொடரில் பங்குபற்றியபோது இலங்கை அணி 5-0 விகிதத்தில் இங்கிலாந்தை வென்றது. சனத் ஜயசூரிய அத்தொடரில் 2 சதங்கள் உட்பட 322 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
42 வயதாகும் சனத் ஜயசூரிய, தற்போது சர்வதேச போட்டிகளில் நீடித்திருக்கும் அதிக வயதான வீரராக உள்ளார். ஆனால், இலங்கையின் சார்பில் அதிக வயதில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் சனத் ஜயசூரிய அல்லர்.
சோமசந்திர டி சில்வா 1885 ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்குபற்றிய போது அவருக்கு வயது 42 வருடங்கள், 261 நாட்களாகும். இவர் தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுத் தலைவராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இலங்கையரான பிளேவியன் அபோன்சோ, 1996 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணி சார்பில் தனது 43 ஆவது வயதில் (43 வருடங்கள், 129 நாட்கள்) விளையாடினார்.

Sunday, June 5, 2011

அப்ரிதியை நீக்கியதற்கு பிசிபி முறையான காரணம் தெரிவிக்க வேண்டும்: வாசிம் அக்ரம்

Best Blogger Tips
அப்ரிதியை கப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் முறையான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் கப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது, அப்ரிதி கப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். அணியை திறம்பட வழிநடத்தினார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியதோடு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது. எனவே சிறப்பாக வழிநடத்திச் சென்ற அப்ரிதியை கப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு போதுமான சரியான காரணங்களை பிசிபி தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற பெரிய முடிவுகளை அவர்கள் அதிரடியாக எடுத்திருக்கக்கூடாது. அவரை நீக்கிய பிறகாவது அவர்கள் அதற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும் என்றார்.
அப்ரிதி கிரிக்கட் வாரியத்தை விமர்ச்சித்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த வாசிம் அக்ரம், இதில் அப்ரிதியின் கருத்தை ஆதரிக்க முடியாது. கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டவுடன் அவர் ஊடகங்கள் முன்னிலையில் கிரிக்கட் வாரியத்தை விமர்சித்திருக்கக்கூடாது. இதுதொடர்பாக முதலில் கிரிக்கட் வாரியத்திடம் தான் பேசியிருக்க வேண்டும். அப்ரிதியின் இந்தச் செயல் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தின் புகழுக்கு பங்கம் விளைவித்துள்ளது என்றார்.
அப்ரிதி பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று கூறிய அவர், அவருக்கு இப்போது 31 வயது தான் ஆகிறது. அதனால் அவர் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாட முடியும். அது பாகிஸ்தான் கிரிக்கட்டுக்கு நல்லதாக அமையும் என்றார். அப்ரிதி - பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் இடையிலான மோதல் குறித்துப் பேசிய அக்ரம், ஏற்கெனவே சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சீரழிந்து காணப்படும் பாகிஸ்தான் கிரிக்கட்டை இந்தப் பிரச்சினை மேலும் அசிங்கப்படுத்தியுள்ளது. எங்கு சென்றாலும் பாகிஸ்தான் கிரிக்கட்டில் என்ன தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
பாகிஸ்தானில் மட்டும் தான் பயிற்சியாளர் அதிக அதிகாரங்களை பெற்றிருக்கிறார். மற்ற நாடுகளில் கப்டனின் கருத்துக்கே பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய கேரி கிறிஸ்டனை இன்னும் நிறைய பேருக்கு தெரியாது. எனவே வக்கார் யூனிஸ் அணி தேர்வில் அதிகாரம் செலுத்தாமல் வீரர்களை சிறப்பாக விளையாட வைக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கிரிக்கட் போட்டியை பொறுத்தவரை கப்டனே அணியை வடிவமைக்கிறார். அவரே முடிவெடுக்க வேண்டும். அப்ரிதி விவகாரத்தில் பிரச்சினை தொடருமானால் அது பாகிஸ்தான் கிரிக்கட்டின் புகழை அழிப்பதாக அமையும். எனவே இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.
News:Lankasri

Saturday, June 4, 2011

கிரிக்கட் சூதாட்டக்காரர்களுடன் ரெய்னாவுக்கு தொடர்பு: புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

Best Blogger Tips
இந்திய கிரிக்கட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா.
உலககோப்பை, ஐ.பி.எல் போட்டியில் இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் போட்டி, ஒருநாள் தொடர் ஆகியவற்றுக்கு ரெய்னா கப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தற்காலிக கப்டனான அவரையும், சூதாட்ட தரகரையும் இணைத்து தகவல் வெளியாகி உள்ளது. சூதாட்ட தரகர்களுடன் ரெய்னா இருப்பது போன்ற புகைப்படத்தை டெலிவிஷன் சேனல் ஒன்று ஒளிபரப்பு செய்துள்ளது. உலககோப்பை வெற்றிக்கு பிறகு ரெய்னா ஷிரிடி சென்றார்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருப்பவர்கள் சூதாட்ட தரகர்கள் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதை சுரேஷ் ரெய்னா மறுத்து உள்ளார். அவர் கூறும் போது,"பலர் என்னுடன் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். உண்மையிலேயே எனக்கு அவர்கள் யார் என்று தெரியாது" என்றார்.
News:Lankasri

அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டனர்: ஹசான் திலகரட்ன

Best Blogger Tips
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் தம்மீது சுமத்தப்பட்ட இந்தக்குற்றச்சாட்டை அரவிந்த டி சில்வா மறுத்துள்ளார். சனத் ஜெயசூரியவும் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

News:Lankasri

இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளில் அப்ரிடி விளையாட முடியும்: இலங்கை கிரிக்கட் வாரியம்

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கட் சபையுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் அப்ரிடிக்கு இலங்கைக் கிரிக்கட் சபையிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இலங்கை பிரீமியர் லீக்கில் விளையாட அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கட் சபையிடமிருந்து ஆட்சேபணையற்ற சான்றிதழ் பெறத் தேவையில்லை என இலங்கை பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அப்ரிடியிடம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கட் சபை அப்ரிடிக்கு ஆட்சேப

இலங்கையின் தோல்வியால் அதர்ச்சியடைந்தாலும் உதவ முடியாது : முரளிதரன் வருத்தம்

Best Blogger Tips
இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி எதிர்பாராமல் படுதோல்வியடைந்தமை குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் மோசமான நிலையிலுள்ள இலங்கை அணியை தோல்வியிருந்து மீட்பதற்காக தான் சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்பும் நோக்கம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 519 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலக சாதனையாளராக விளங்கும் முத்தையா முரளிதரன், இங்கிலாந்தின் பிராந்திய போட்டிகளில் குளொசெஸ்டஷயர் அணிக்காக விளையாடவுள்ளார்.

Friday, June 3, 2011

இந்திய கிரிக்கட் வாரியத்தின் ஆதிக்கம் இருப்பது உண்மை தான்: கருத்துக்கணிப்பில் தகவல்

Best Blogger Tips
இந்திய கிரிக்கட் வாரியம், சர்வதேச கிரிக்கட் கவுன்சிலில் ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான் என்று சர்வதேச வீரர்களிடையே நடந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐ.சி.சி நிர்வாகம், பி.சி.சி.ஐ.யின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டு உள்ளது என இலங்கை அணியின் முன்னாள் கப்டன் ரணதுங்கா குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் இந்திய வீரர்கள் இல்லாத சர்வதேச கிரிக்கட் வீரர்கள் சங்கத்தின்(எப்.ஐ.சி.ஏ) சார்பில் கடந்த உலக கோப்பை தொடரின் போது ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. 45 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்ற இதன் முடிவை இதன் தலைவர் டிம் மே வெளியிட்டுள்ளார்.
இதன் விவரம்: சர்வதேச அளவில் கிரிக்கட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த ஐ.சி.சி.யின் கட்டமைப்பு நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என 46 சதவீத வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் ஐ.சி.சி.யின் முடிவெடுக்கும் உரிமைகளில் பி.சி.சி.ஐ தலையிடுவதாக 69 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 31 சதவீதம் பேர் இந்த கேள்விக்கு பதில் தெரியாது என்றனர்.
அதேநேரம் 40 சதவீதம் பேர் அதிகமாக கிடைக்கும் சம்பளத்தினால் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடருக்காக சர்வதேச கிரிக்கட்டில் இருந்து முன்னதாக ஓய்வு பெற விரும்புகின்றனர். தவிர இந்தப் பணம் தான் இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்த தூண்டுகோலாக உள்ளது என(95 சதவீதம் பேர்) நம்புகின்றனர்.
அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறையை அனைத்து பயிற்சி போட்டிகளிலும் கொண்டு வரவேண்டும் என 97 சதவீதத்தினர் தெரிவித்தனர். இதை உலக கோப்பை தொடரில் பயன்படுத்தியது சரிதான் என 82 சதவீதம் பேர் கூறினர். சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடர் மிக நீண்டது என 74 சதவீதமும், அடுத்த தொடரில் அணிகளை குறைக்கும் முடிவுக்கு சரிதான் என 72 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
50 ஓவர் கிரிக்கட்டில் மாற்றம் கொண்டு வரவேண்டுமா என்ற கேள்விக்கு 24 சதவீதத்தினர் தான் சம்மதம் கூறினார். தவிர 39 சதவீத வீரர்கள் அதிகப்படியான கிரிக்கட் காரணமாக மக்களிடையே இந்த போட்டிக்கு வரவேற்பு குறைந்துள்ளது என்ற தெரிவித்தனர்.
News:Lankasri

Thursday, June 2, 2011

அதிபரை சந்திக்க அப்ரிடி முடிவு

Best Blogger Tips
சர்வதேச கிரிக்கட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அப்ரிடி கிரிக்கட் வாரியத்தை கடுமையாக சாடினார்.
சேர்மன் பதவியில் இஜாஸ்பட் இருக்கும் வரை சர்வதேச போட்டிக்கு திரும்பவே மாட்டேன் என அப்ரிடி சபதம் எடுத்துள்ளார்.
இதற்கிடையே வாரியத்தை விமர்சித்ததற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அப்ரிடி ஒரே நாளில் பதில் அனுப்பியுள்ளார். இதை வாரியமும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் ஆஷிப் அலி சர்தாரியை சந்தித்து பேச அப்ரிடி முடிவு செய்துள்ளார்.

Wednesday, June 1, 2011

மீண்டும் விளையாட காத்திருக்கும் சமிந்தா வாஸ்

Best Blogger Tips
இலங்கைக் கிரிக்கெட்டிலிருந்து அழைப்பு வந்தால் லோட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சமிந்தவாஸ் தெரிவித்துள்ளார்.
சமிந்த வாஸ் இலங்கைக் கிரிக்கெட் அணிக்காக விளையாடி 355 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான சமிந்தவாஸ் 2009 ஜூலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சமிந்தவாஸ் நேற்று நோர்த்தாம்டன்ஷயர் அணிக்காக விளையாடி கிளாமோர்கன் அணியின் 7 விக்கெட்டுக்களைப் பெற்று தனது உடல்தகுதியை நிரூபித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் 10 ஓவர்களில் 22 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி கிளாமோர்கன் அணியை 72 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
News:Lankasri

கடுமையாக விமர்சித்ததால் அப்ரிடி மீது கிரிக்கட் வாரியம் நடவடிக்கை

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் அப்ரிடி. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் காரணமாக அவர் நேற்று கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்ரிடியின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அப்போது பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் மீதும், தேர்வு குழு உறுப்பினர் முகமது இல்லியாஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் அப்ரிடி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது ஒப்பந்ததை சஸ்பெண்டு செய்துள்ளது.
அதோடு அவருக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழையும் நீக்கி உள்ளது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி போட்டியிலும் மற்ற எந்த 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட இயலாது. அதோடு விமர்சனம் செய்தது தொடர்பாக அப்ரிடியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சுழல் மன்னன் முரளிதரன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, விளையாட்டு அனுபவங்கள் பற்றி சிறப்பு நேர்காணல்! (வீடியோ இணைப்பு)

Best Blogger Tips

ஃபீஃபாவிலிருந்து ஆசிய கால்பந்து சம்மேளனத் தலைவர் இடைநிறுத்தம்

Best Blogger Tips
ஆசிய கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவரான மொஹமட் பின் ஹம்மாம் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) நிறைவேற்றுக் குழுவிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்டாரைச் சேர்ந்த பின் ஹம்மாமுடன் பீபா உபதலைவர்களில் ஒருவரான ட்ரினிடாட்டைச் சேர்ந்த ஜக் வார்னரும் ஃபீஃபா ஒழுக்காற்றுக் குழுவொன்றினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஃபீஃபா தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக பின் ஹம்மாம் சேர்ந்த பின் அறிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக ட்ரினிடாட்டில் நடைபெற்ற கரிபிய கால்பந்தாட்ட ஒன்றிய பிரதிநிதிகளின் விசேட கூட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் 25 நாடுகளின் பிரநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கான பயணச் செலவு தங்குமிடச் செலவுகள் பின் ஹம்மாமினால் ஏற்கப்பட்டன.  அதேவேளை கூட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு விசேட அன்பளிப்பு பொதியொன்றும் வழங்கப்பட்டதாக புகாரிடப்பட்டுள்ளது.
அப்பொதிகள் ஒவ்வொன்றிலும் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இருந்தனவாம். பஹாமஸ் நாட்டின் பிரதிநிதி தமக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் கடதாசிப் பையையும் அதிலிருந்த பணத்தையும் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளார். அதில் 100 அமெரிக்க டொலர்; நாணயத்தாள்களான 40 ஆயிரம் டொலர்கள் காணப்படுகின்றன.
இது ஃபீஃபா தலைவர் பதவிக்கு தெரிவாகுவதற்கான வாக்குகளைப் பெறுவதற்கான லஞ்சம் வழங்கல் நடவடிக்கை என பின் ஹம்மாமுக்கும் பீபா உபதலைவர் ஜக் வார்னருக்கும் எதிராக புகாரிடப்பட்டது.
இது தொடர்பாக ஃபீஃபா ஒழுக்காற்றுக்குழு விசாரணை நடத்தவிருந்த நிலையில் ஃபீஃபா தலைவர் ஸெப் பிளாட்டருக்கு இவ்விடயம் முன்கூட்டியே தெரியும் என பின் ஹம்மாம் தெரிவித்தார்.  அதனால் மேற்படி 3 முக்கிய புள்ளிகளிடமும்  நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. இவ்விசாரணைகளின்பின் ஃபீஃபா தலைவர் ஸெப் பிளாட்டரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்த ஒழுக்காற்று குழு, ஜக் வார்னரையும் பின் ஹம்மாமையும் இடைநிறுத்தியுள்ளது.
இவர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. இதில் குற்றவாளிகளாக காணப்பட்டால் எந்த வகையான கால்பந்தாட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் தன்னை இடைநிறுத்தியமைக்கு எதிராக தான் மேன் முறையீடு செய்யப்போவதாக பின் ஹம்மாம் அறிவித்துள்ளார். ஃபீஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து அவர் ஏற்கெனவே விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்வரும் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள ஃபீஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தெரிவாகும் நிலையை ஸெப் பிளாட்டர் எதிர்நோக்குகிறார். சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த 75 வயதான பிளாட்டர் 4 ஆவது தடவையாக இப்பதவிக்குப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
News:Lankasri

Text Widget

Text Widget