பாகிஸ்தான் கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அப்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதுடன் வாரியத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.இதையடுத்து அவர் வெளிநாடு மற்றும் உள்ளூர் அணிகளில் விளையாடுவதற்கு கிரிக்கட் வாரியம் சார்பில் வழங்கப்பட்ட தடையில்லா சான்று ரத்து செய்யப்பட்டது.
மேலும் 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு 8ந் திகதி விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவாலை அப்ரிடி லண்டனில் சென்று சந்தித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ்செரீப் ஆதரவையும் கேட்டார்.
அதன்பின் அவர் நேற்று இரவு நாடு திரும்பினார். இதையறிந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றனர். அவரை காரில் அழைத்து ஊர்வலமாக வந்தனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் அப்ரிடிக்கு ஆதரவாக இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது விசாரணையை பாதிக்கும் என கிரிக்கட் வாரிய தலைவர் இஜாஸ்பட் தெரிவித்துள்ளார்.
![]() |



0 comments:
Post a Comment