Pages

Saturday, June 11, 2011

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் மீண்டும் புறக்கணிப்பு

Best Blogger Tips
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கப்டன் கிறிஸ் கெய்ல். சிறந்த அதிரடி துடுப்பாட்டக்காரரான இவர் கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழுவினரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல் இடம் பெறவில்லை. அதன் பிறகு இந்தியாவில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு றோயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கெய்ல் விளையாடினார். இதில் கெய்ல் சிறப்பாக ஆடி முத்திரை பதித்தார். அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியாவுக்கு எதிரான அணியிலும் கெய்ல் இடம் பெறவில்லை. அவர் அணியில் இல்லாததால் 20 ஓவர் போட்டியிலும் அடுத்த நடந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்றது. எனவே 3 வது போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 வது போட்டியிலும் கெய்ல் இடம் பெறவில்லை.
3 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கெய்ல் பெயர் இடம் பெறவில்லை. மேலும் அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிராவோவுக்கு பதில் டான்சா ஹயாத்தும் ராம் பாலுக்கு பதில் கெமர் ரோச்சும் இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம் வருமாறு:
டாரென் சமி (கப்டன்), கார்ட்டன் பாக், தேவேந்திர பிஷோ, டாரென் பிராவோ, கிர்க் எட்வர்ட்ஸ், டான்சா ஹயாத், ஆன்டனி மார்ட்டின், போலார்ட், கெமர் ரோச், ஆன்ட்ரே ருஸ்செல், சாமுவேல்ஸ், சர்வான், சிம்மன்ஸ்.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget