Pages

Sunday, June 19, 2011

சச்சினால்தான் இன்னமும் ஊக்கம் பெறுகிறேன் : ராவிட் பெருமிதம்

Best Blogger Tips
சச்சின் டெண்டுல்கருடன் 19 முறை 100 ரன்களுக்கும் மேல் ஜோடி சேர்ந்து எடுத்துள்ள ராகுல் டிராவிட் இன்னமும் தனக்கு சச்சின் டெண்டுல்கர்தான் ஊக்கத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்."அவரது கடைசி 2- 3 வருடங்கள் அபாரமானது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரும்போது அவர் ஏற்கனவே 6- 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருந்தார். அவர் 1997 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் தொடரில் அணிக்கு கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு ஒரு பெரும் கிரியா ஊக்கியாக இருந்தார். இன்றளவிலும் அதில் மாற்றமில்லை" என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் திராவிட் 150 போட்டிகளில் 52.44 என்ற சராசரியுடன் இதுவரை 12,063 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 10 டெஸ்ட் அணிகளுக்கு எதிராகவும் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

தற்போது தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட் இருப்பது பற்றி தெரிவித்த ராகுல் திராவிட், அதற்கு முழு மூச்சுடன் தயார் செய்து வருவதாகத் தெரிவித்தார். 

"நான் போதுமான அளவுக்கு விளையாடியிருக்கிறேன் என்றாலும் இன்னமும் அழுத்தம் உள்ளது, இன்னமும் நடுக்கம் உள்ளது, வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் கலக்குகின்றன. இவையெல்லாம் மாறதவை. துவக்கத்தில் ரன்களை எடுக்கத் தொடங்கி ஃபார்மை அப்படியே தொடரவேண்டும். 

தோனி போன்ற ஒரு கேப்டனை இந்திய அணி பெற்றது அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும் எந்த நெருக்கடியிலும் அவர் கூலாக இருப்பது அவரது அபாரமான குணாதிசயம். 

சபைனா பார்க் மைதானத்தில் சுனில் கவாஸ்கர் சதங்களை எடுப்பதை வானொலி வர்ணனையில் கேட்கும்போது நாமும் இந்த மண்ணில் விளையாட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். அதுவும் அந்த பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களை அவர் விளையாடியபோது நாமும் இங்கு விளையாட வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget