இலங்கைக் கிரிக்கெட்டிலிருந்து அழைப்பு வந்தால் லோட்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சமிந்தவாஸ் தெரிவித்துள்ளார்.சமிந்த வாஸ் இலங்கைக் கிரிக்கெட் அணிக்காக விளையாடி 355 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான சமிந்தவாஸ் 2009 ஜூலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சமிந்தவாஸ் நேற்று நோர்த்தாம்டன்ஷயர் அணிக்காக விளையாடி கிளாமோர்கன் அணியின் 7 விக்கெட்டுக்களைப் பெற்று தனது உடல்தகுதியை நிரூபித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் 10 ஓவர்களில் 22 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி கிளாமோர்கன் அணியை 72 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
News:Lankasri


0 comments:
Post a Comment