மேலும் அவரது சர்வதேச கிரிக்கட் வாழ்வையே ஒழித்துக் கட்ட முயற்சி செய்வதாகவும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரிய வாட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வீரர்கள் சங்கத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கட் வாரியத்திற்கும் இடையே கிறிஸ் கெய்ல் எதிர்காலம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
கெய்ல் கொடுத்த வானொலி பேட்டி விவகாரத்தில் அவர் தன் பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் அதன் பிறகு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகே மன்னித்து கெய்லை ஏற்றுக் கொள்வார்களாம். இது வீரர்கள் சங்கத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள செய்தியாகும். ஆனால் இப்போதைக்கு கெய்ல் விடயத்தில் பிரகாசமாக எதுவும் இல்லை என்று ஏமாற்றத்துடன் தெரிவித்துள்ளது வீரர்கள் சங்கம்.
உடல் நிலைத் தகுதிக்காக பயிற்சியில் உள்ள ஒருவரை எந்த வித காரணத்தையும் அறிவிக்காமல் அணியில் தெரிவு செய்யாமல் இருந்தார்கள். அப்போது ஐபிஎல் அணியான ரோயல் சாலஞ்சர்ஸ் அணியிலிருந்து அழைப்பு வர அவர் இந்தியா வந்து விடுகிறார். இதில் கெய்லின் தவறு என்ன என்று தெரியவில்லை. மேலும் இதன் பிறகே அவர் ஜமைக்கா வானொலிக்கு பேட்டியளித்து வாரியம், பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் மீது புகார்களை அடுக்கினார்.
குறிப்பாக ராம் நரேஷ் சர்வாணை பயிற்சியாளர் கிப்சன் பாடாய்படுத்தி அவரது தன்னம்பிக்கையையே இழக்கச் செய்துள்ளார் என்று கூறினார். அவர் கூறியதன் மீதான நடவடிக்கையை பயிற்சியாளரைக் கண்காணிப்பதில் திருப்பாத வாரியம் கிறிஸ் கெய்லை மண்டியிட அழைக்கிறது.
இந்தப் பேச்சையெல்லாம் தற்போது அசை போட்டுக் கொண்டிருக்கும் வாரிய நிர்வாகிகள் கெய்லின் கிரிக்கட் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அவுஸ்ட்ரேலிய கிரிக்கட் வாரியம் ஆண்ட்ரூ சைமண்ட்சைச் செய்தது போலவே கிறிஸ் கெய்லையும் செய்து விட தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன
News:Lankasri


0 comments:
Post a Comment