இலங்கை பிரிமியர் லீக் தொடருக்குப் பின்னணியில் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி இருப்பதால் தான், இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க பி.சி.சி.ஐ. தடை விதித்தது. பி.சி.சி.ஐ. புகாரை மறுத்த, பதவி நீக்கம் செய்யப்பட்ட லலித் மோடி கூறுகையில், கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கட் லீக் அமைப்பை நசுக்குவதற்கு, நான் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அமைத்தது.
பி.சி.சி.ஐ. சார்பில், பிற அனைத்து கிரிக்கட் வாரியங்களையும் தங்களுக்கு ஆதரவாக செயல்படச் செய்தனர். அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என கடுமையாக குற்றம் சுமத்தினார். லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டு குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் சஷாங்க் மனோகர் கூறியது, லலித் மோடிக்கு தர வேண்டிய அவசியம் இல்லை. அவரது கருத்துக்களைக் கேட்கும் போது, கேலிக்கூத்தாக உள்ளது. அவர் தனது பேச்சின் மூலம் ஊடகங்களை மயக்க பார்க்கலாம். என்னை மயக்க முடியாது.
மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தேசிய விளையாட்டு வளர்ச்சி மசோதாவில், என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, இதுவரையிலும் எங்களுக்குத் தெரியாது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று சஷாங்க் மனோகர் தெரிவித்தார்.
இதனிடையே இப்பிரச்சினையில் தலையிட்டுள்ள இலங்கை விளையாட்டு அமைச்சர் அலுத்கமாகே கூறுகையில், பி.சி.சி.ஐ.யுடன் எங்களுக்கு நல்ல நட்புறவு உள்ளது. இதனால் வீரர்கள் பிரச்சினையில் விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக எங்கள் கிரிக்கட் நிர்வாகிகள், பி.சி.சி.ஐ. மூத்த நிர்வாகிகளை சந்தித்து, இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதி வாங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
News:Lankasri



0 comments:
Post a Comment