Pages

Tuesday, June 14, 2011

பயிற்சியாளர் கிரெக் சாப்பல் காலக்கட்டம் மிகுந்த ஏமாற்றம் தந்தது: ஜாகீர்கான்

Best Blogger Tips
தனது 10 ஆண்டுகால கிரிக்கட் வாழ்வில் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் காலக்கட்டம் தான் மிகுந்த ஏமாற்றம் தந்ததாகும் என்று இந்திய இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் சிறப்பு பேட்டி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார். அதாவது, உங்களை ஏதோ ஒன்றில் மாட்டி விடும் சூழ்நிலை நிலவியது. அதாவது நீ இந்த அணியில் தேவையில்லை, உன்னுடைய ஆட்டம் காரணமல்ல ஆனால் உன்னுடைய அணுகுமுறையே காரணம், உன்னுடைய அணுகுமுறை எங்களுக்கு பிடிக்கவில்லை. இந்திய அணியின் வளர்ச்சியை நீ தடுக்கிறாய் என்று அவர் என்னிடம் கூறுவது போன்ற சூழ்நிலை இருந்தது.
இலங்கைத் தொடருக்குப் பிறகு நான் நேரடியாக அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். இத்தனைக்கும் இலங்கை தொடரில் நான் அவ்வளவு மோசமாக விளையாடவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா சென்று ஆசிய அணியில் இடம்பெற்று விளையாடியது எனது அதிர்ஷ்டம்.
நான் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். உடனேயே நான் அணியில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டேன். ஆனாலும் அந்தக் காலக்கட்டம் போராட்டமாகவே இருந்தது. அணியின் உள்ளுக்குள்ளேயே ஒருவர் போராட வேண்டியிருப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்தப் போராட்டத்தில் ஒரு தனிப்பட்ட வீரர் வெற்றி பெறுவது கடினம்.
ஆனால் கேரி கிறிஸ்டன் ஒரு பயிற்சியாளர் அல்ல அவர் எங்களது நண்பர். அனைவருக்கு உரிய இடத்தை அவர் வழங்கினார். அவருக்கு இந்தியப் பண்பாடு தெரிந்திருந்தது. நாம் எவ்வாறு விடயங்களை யோசிக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்தார். எங்களிடம் நெருங்கும் உத்தியை அவர் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget