சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின், தென் ஆப்ரிக்க அணியின் ஒருநாள் மற்றும் "டுவென்டி 20" போட்டிகளுக்கான கப்டன் பொறுப்பில் இருந்து ஸ்மித் விலகினார். இதனால், ஒருநாள் மற்றும் "டுவென்டி 20" போட்டிகளுக்கு டிவிலியர்ஸ் புதிய கப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். துணைக் கப்டனாக ஹசிம் ஆம்லா அறிவிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆம்லா கூறியதாவது, தென் ஆப்ரிக்க அணியின் கப்டன் பொறுப்புக்கு டிவிலியர்ஸ் மிகவும் தகுதியானவர். கப்டன் பதவி என்பது சாதாரன வி்டயமல்ல. இதற்கு நிறைய பொறுப்புகள், கடமைகள் உள்ளன. எனவே இப்பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. துணைக் கப்டன் பதவி போதுமானதாக கருதுகிறேன்.
ஸ்மித் கப்டன் பொறுப்பில் இருந்து விலகியவுடன், நான் கப்டனாக நியமிக்கப்படலாம் என ஊடகங்களில் கருத்து வெளியாகின. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் தற்போது எனது கவனம் முழுவதையும் துடுப்பாட்டத்தில் செலுத்தியுள்ளேன். இதன்மூலம் "டுவென்டி 20" போட்டிகளில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.
அடுத்து வரும் நாட்களில் நிறைய "டுவென்டி 20" மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, வரும் 2015 ல் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடரில் சாதிக்க விரும்புகிறேன் என்று ஆம்லா தெரிவித்தார்.
News:Lankasri



0 comments:
Post a Comment