தற்போதைய நிலையில் ஐ.சி.சி நிர்வாகம், பி.சி.சி.ஐ.யின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டு உள்ளது என இலங்கை அணியின் முன்னாள் கப்டன் ரணதுங்கா குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் இந்திய வீரர்கள் இல்லாத சர்வதேச கிரிக்கட் வீரர்கள் சங்கத்தின்(எப்.ஐ.சி.ஏ) சார்பில் கடந்த உலக கோப்பை தொடரின் போது ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. 45 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்ற இதன் முடிவை இதன் தலைவர் டிம் மே வெளியிட்டுள்ளார்.
இதன் விவரம்: சர்வதேச அளவில் கிரிக்கட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த ஐ.சி.சி.யின் கட்டமைப்பு நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என 46 சதவீத வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் ஐ.சி.சி.யின் முடிவெடுக்கும் உரிமைகளில் பி.சி.சி.ஐ தலையிடுவதாக 69 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 31 சதவீதம் பேர் இந்த கேள்விக்கு பதில் தெரியாது என்றனர்.
அதேநேரம் 40 சதவீதம் பேர் அதிகமாக கிடைக்கும் சம்பளத்தினால் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடருக்காக சர்வதேச கிரிக்கட்டில் இருந்து முன்னதாக ஓய்வு பெற விரும்புகின்றனர். தவிர இந்தப் பணம் தான் இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்த தூண்டுகோலாக உள்ளது என(95 சதவீதம் பேர்) நம்புகின்றனர்.
அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறையை அனைத்து பயிற்சி போட்டிகளிலும் கொண்டு வரவேண்டும் என 97 சதவீதத்தினர் தெரிவித்தனர். இதை உலக கோப்பை தொடரில் பயன்படுத்தியது சரிதான் என 82 சதவீதம் பேர் கூறினர். சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடர் மிக நீண்டது என 74 சதவீதமும், அடுத்த தொடரில் அணிகளை குறைக்கும் முடிவுக்கு சரிதான் என 72 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.
50 ஓவர் கிரிக்கட்டில் மாற்றம் கொண்டு வரவேண்டுமா என்ற கேள்விக்கு 24 சதவீதத்தினர் தான் சம்மதம் கூறினார். தவிர 39 சதவீத வீரர்கள் அதிகப்படியான கிரிக்கட் காரணமாக மக்களிடையே இந்த போட்டிக்கு வரவேற்பு குறைந்துள்ளது என்ற தெரிவித்தனர்.
News:Lankasri



0 comments:
Post a Comment