இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் (ஐ.சி.சி.) 3 மாத காலத்திற்கு போட்டிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உலகக்கிண்ணப் போட்டிகளின்போது தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியமையே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த உலகக் கிண்ணத் தொடரில் மார்ச் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நியூஸிலாந்துடனான அரையிறுதிப் போட்டியின் பின் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் உபுல் தரங்க தோல்வியடைந்ததாக ஐ.சி.சி. இன்று வெள்ளிக்கிழமை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. |
0 comments:
Post a Comment