| இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. எனினும் முதலாவது டெஸ்ட்டில் வென்ற இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியை 1-0 விகிதத்தில் தனதாக்கிக் கொண்டுள்ளது. இப்போட்டியில் நெருக்கடியான நிலையிலிருந்த இலங்கை அணி பின்னர் பேராடி தோல்வியைத் தவிர்த்துக் கொண்டுள்ளது.  போட்டியின் நான்காவது நாளான நேற்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்இழப்பிற்கு 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இறுதிநாளான இன்று இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டி முடிவுற்றது. நேற்று 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அணித்தலைவர் குமார் சங்கக்கார 119 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். திலான் சமரவீர ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிறிஸ் ட்ரெம்லெட் தெரிவானார். சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிரசன்ன ஜயவர்தனவும் கிறிஸ் ட்ரெம்லெட்டும் தெரிவாகினர். |
0 comments:
Post a Comment