எனினும் மோசமான நிலையிலுள்ள இலங்கை அணியை தோல்வியிருந்து மீட்பதற்காக தான் சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்பும் நோக்கம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 519 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலக சாதனையாளராக விளங்கும் முத்தையா முரளிதரன், இங்கிலாந்தின் பிராந்திய போட்டிகளில் குளொசெஸ்டஷயர் அணிக்காக விளையாடவுள்ளார்.
இப்போட்டிகளுக்காக இந்தியாவிலிருந்து கடந்த திங்கட்கிழமை புறப்பட்டார் முரளிதரன். விமானம் ஏறிய வேளையில் முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடியும் என்றே முரளி நம்பியிருந்தார்.
ஆனால் 11 மணித்தியாலங்களின் பின் அவர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இலங்கை அணி தோல்வியடைந்துவிட்டது என அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தாராம்.
இது குறித்து முரளி கூறுகையில்,
'நான் இந்தியாவிலிருந்து விமானமேறியபோது ஆட்டம் ஆரம்பிக்கவும் இல்லை. பெருமளவு நேரம் மழையினால் இழக்கப்பட்டிருந்தது. இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைவதைத் தவிர வேறு முடிவு எதையும் அப்போது நான் எதிர்பார்க்கவில்லை.
அன்று மாலை நான் விமானத்திலிருந்து இறங்கியபின் இலங்கை அணி 82 ஓட்டங்களுடன் சுருண்டுவிட்டது என கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்' என்றார்.
ஆனால் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதற்கு தான் எண்ணவில்லை எனவும் முரளி கூறியுள்ளார்.
'தற்போது நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். நான் அவர்களுக்கு உதவ முடியாது. ஏனெனில் நான் அங்கு இல்லை.
அவர்கள் புதிய வீரர்களுக்கூடாக மற்றொரு வழியை கண்டறிய வேண்டும். பயிற்றுநர் அணித்தலைவர்கள் அனைவரும் இருக்கிறார்கள். எனவே அவர்களே தம்மைத்தாமே கையாள வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி நடப்பதுண்டு. சில வருடங்களுக்குமுன் இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளில் 46 ஓட்டங்களுடன் சுருண்டமை நினைவிலுள்ளது. எனவே இதை மறந்துவிட்டு, லோர்ட்ஸில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் நோக்சி செல்ல வேண்டும்' என அவர் கூறினார்.



0 comments:
Post a Comment