
நியூசிலாந்து கிரிக்கட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.
டொஸ் வென்ற நியூசிலாந்து அணி கப்டன் பிரன்டன் மெக்கல்லம், ஜிம்பாப்வே அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கப்டன் டெய்லர் 46 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி தரப்பில் மில்ஸ், நாதன் மெக்கல்லம் தலா 2 விக்கெட்டும், பிரைஸ்வெல், ஓரம், உட்காக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 124 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 13.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 127 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் 36 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்னும், பிரன்டன் மெக்கல்லம் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 81 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
பிரன்டன் மெக்கல்லம் ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
News:Lanka Sri


0 comments:
Post a Comment