Pages

Saturday, October 15, 2011

ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை: பிசிசிஐ [

Best Blogger Tips

ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) கிரிக்கட் போட்டி 2012 ஏப்ரல் 4 முதல் மே 27 வரை நடைபெறவுள்ளது. 
தொடக்க விழா ஏப்ரல் 3ம் திகதியும், முதல் ஆட்டம் ஏப்ரல் 4ம் திகதியும் நடைபெறுகிறது. இவை இரண்டுமே சென்னையில் தான் நடைபெறுகிறது.

ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் புதிய தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த ஐபிஎல் போட்டியிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்த விஷயம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 9 அணிகள் மட்டுமே பங்கேற்கும். கடந்த ஐபிஎல்-லில் 10 அணிகள் பங்கேற்றன. கடந்த மாதம் கொச்சி அணியின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
அதனால் அந்த அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த விவிஎஸ் லட்சுமணன், ஸ்ரீசாந்த், முத்தையா முரளீதரன், ஜெயவர்த்தனா உள்ளிட்டோர் மீண்டும் ஏலம் விடப்படுவார்கள் என்று தெரிகிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget