Pages

Friday, October 21, 2011

இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம்: பார்சிலோனா முடிவு

Best Blogger Tips
இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம் நடத்த பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கால்பந்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் கால்பந்து அணி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. 1899-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கால்பந்து கிளப் நிதிநிலையிலும் பலமானது. ஸ்பெயின், ஐரோப்பிய கால்பந்து சாம்பியனாகவும் பார்சிலோனா உள்ளது.
தலைநகர் டெல்லியில் ஜனவரி மாதத்தில் ஒருவாரம் கால்பந்து பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பார்சிலோனா அணியின் பயிற்சியாளர்கள் கலந்து கொள்வார்கள். 6 முதல் 14 வயதுள்ள கால்பந்து ஆர்வமுள்ள சிறுவர்களுக்கு இவர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
இந்தியாவில் உள்ள கால்பந்து பயிற்சியாளர்களுக்கும் தனியாக இவர்கள் ஆலோசனை வழங்கவுள்ளனர். இந்தியாவில் இளைஞர்கள் பலருக்கும் கால்பந்தில் ஆர்வம் உள்ளது.
ஆனால் விளையாட்டு நுட்பங்கள் சரியாகத் தெரியவில்லை. இதுவே இந்தியாவில் உள்ள பிரச்னை. எந்த விளையாட்டிலும் உள்நாட்டில் உள்ள அணிகள் வெற்றி பெற்றால்தான் பிரபலமாகும். இவற்றுக்குத் தீர்வுகாண இப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி சர்வதேச தரத்தில் இருக்கும் என்று பார்சிலோனா நிர்வாகம் தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget