Pages

Sunday, October 23, 2011

சூதாட்ட தரகர் மசார் மஜீத் என்னை அணுகினார்: அப்ரிடி

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய போது “ஸ்பாட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சூதாட்ட தரகர் மசார் மஜீத்திடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் விளையாட ஐ.சி.சி தடை செய்தது.
இந்த ஸ்பாட் பிக்சிங் வழக்கு தற்போது லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது பல்வேறு பாகிஸ்தான் வீரர்கள் தன்னிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள் என்று சூதாட்ட தரகர் மஜீத் கூறி இருந்தார். அதோடு கப்டன் பதவியில் இருந்து அப்ரிடியை அகற்ற சகவீரர்களே விரும்பினார்கள் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சூதாட்ட தரகர் மஜீத் தன்னை அணுகியதாக பாகிஸ்தான் முன்னாள் கப்டன் அப்ரிடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: சூதாட்டதரகர் மஜீத் என்னை நண்பராகவும், நெருக்கமானவராகவும் ஆக்க பலமுறை அணுகினார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் என்னை அணுகிய போதும் நான் அவரிடம் எனது நேர்மை குறித்து தெரிவித்தேன்.
ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு இருந்த மரியாதை மிகவும் கெட்டு விட்டது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்லும் முன்பு அணி நிர்வாகத்திடம் சூதாட்ட தரகர் மஜீத்திடம் வீரர்களுக்கு உள்ள நெருக்கம் குறித்து எச்சரித்து இருந்தேன்.
விரைவில் பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவேன். எனக்கு மிகுந்த ஆதரவு இருப்பதால் நம்பிக்கை இருக்கிறது.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget