ஆட்டநிர்ணய மோசடி தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான
சல்மான் பட் , மொஹமட் ஆஷிவ் ஆகியோர் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றமொன்று
இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அணித்தலைவரான சல்மான் பட் (27) மொஹமட் ஆஷிவ் ஆகியோர் பணம்
பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதற்கு சதி செய்தாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை
நிராகரித்திருந்தனர்.
எனினும் லண்டனின் சௌத்வர்க் கிறவுன் நீதிமன்றம், இவ்விரு வீரர்களும்
ஏமாற்றுவதற்கு சதிசெய்தமை, மோசடிப் பணத்தை பெறுவதற்கு சதிசெய்தமை ஆகிய
விடயங்களில் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் 26-29 ஆம் திகதிகளுக்கிடையில் இங்கிலாந்தின் லோர்ட்ஸ்
மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியின்போது சூதாட்ட
முகவரான மஸார் மஜீத் என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே நோபோல்
வீசியதாக சல்மான் பட், மொஹமட் ஆஷிவ், மற்றும் மொஹமட் அமீர் ஆகிய வீரர்கள்
மீது குற்றம் சுமத்தப்பட்டது. குறைந்தபட்சம் 3 நோபோல்கள் வேண்டுமென்றே
வீசப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் மொஹமட் அமீரும் சூதாட்ட முகவர்கள் மஸார் மஜீத்தும் ஏற்னெவே குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சல்மான் பட்டும் மொஹமட் ஆஷிவ் ஆகியோர் மில்லியன் கணக்கான மக்கள்
பார்வையிட்ட போட்டிக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தியதாகவும் இதன்
மூலம் அவர்களின் அணியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையையும்
ஏமாற்றியதாகவும் வழக்குத் தொடுநர்கள் வாதிட்டனர்.
இவ்விரு வீரர்களுக்கான தண்டனை இவ்வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. அதுவரை இவர்களுக்கான பிணை நீடிக்கப்பட்டுள்ளது.
சல்மான் பட் 7 வருடம் வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய நிலையை
எதிர்நோக்கியுள்ளார். விதிக்கப்படலாம். பிரிட்டனில் ஏமாற்றுவதற்கு சதி
செய்த குற்றத்திற்கான குறைந்தபட்ச தண்டனையில் இருவருட கடூழிய
சிறைத்தண்டனையும் அடங்கலாம்.
Wednesday, November 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)




0 comments:
Post a Comment