ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்காக 15 பேர் கொண்ட
இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தில்ஹாரவும் ஒருவராவார். 32 வயதான தில்ஹார இறுதியாக கடந்த பெப்ரவரி மாதம் மேற்கிந்திய அணிக்கெதிராக விளையாடினார். உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான குழாமில் தில்ஹார இடம்பெற்றிருந்த போதிலும் எந்தவொரு போட்டியிலும் அவர் விளையாடவில்லை. அதன்பின் இங்கிலநர்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியில் அவ்ரிடி
இதேவேளை இப்போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் தலைவர் சஹீட் அவ்ரிடி இடம்பெற்றுள்ளார்.
மேற்கிந்திய சுற்றுலாவின்போது பயிற்றுநர் வக்கார் யூனிஸுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அவ்ரிடி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து அவர் கிரிககெட்டிலிருந்து விலகுவதகா அறிவித்தார்.
அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து தான் மீண்டும் பாகிஸ்தானுக்காக விளையாட விரும்புவதாக அவ்ரிடி கூறியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கையுடனான ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றவுள்ள மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான அணியில் அவ்ரிடியும் இடம்பெற்றுள்ளார்.
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சுற்றுப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகவுள்ளது.
அணிகள் விபரம்:
இலங்கை
திலகரட்ன தில்ஷான் (தலைவர்), உபுல் தரங்க, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ஏஞ்சலோ மத்திவ்ஸ் (உபதலைவர்) தினேஷ் சந்திமால், ஜீவன் மெண்டிஜ், கோசல குலசேகர, லஷித் மாலிங்க, சுரங்க லக்மால், தம்மிக பிரசாத், சீகுகே பிரசன்ன, திமுத் கருணாரட்ன, தில்ஹார பெர்னாண்டோ, சுராஜ் ரந்தீவ்.
பாகிஸ்தான்
மிஸ்பா உல் ஹக் (தலைவர்) சஹீட் அவ்ரிடி, மொஹமட்; ஹாபீஸ், இம்ரான் பர்ஹாத், யூனிஸ் கான், உமர் அக்மல், சொஹைப் மலிக், சர்ப்ராஸ் அஹமட் (விக்கெட் காப்பாளர்) சயீட் அஜ்மல், அப்துர் ரஹ்மான், உமர் குல், அய்ஸாஸ் சீமா, ஜுனைத் கான், சொஹைல் தன்வீர், அப்துல் ரஸாக், அஸாத் சபீக்



0 comments:
Post a Comment