Pages

Friday, May 6, 2011

உதைப்பந்தாட்ட செய்தி பிரிமியர் லீக் கால்பந்து: ஆர்செனல் அணியுடன் மான்செஸ்டர் அதிர்ச்சி தோல்வி

Best Blogger Tips
லண்டனில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனல் அணி 1-0 கோல் கணக்கில் லீக் போட்டியின் முன்னோடியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
தோல்வியைத் தழுவிய மான்செஸ்டர் அணி செலிசா அணியை விட 3 புள்ளி மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது. அந்த அணி இன்னும் 3 ஆட்டங்களில் ஆட வேண்டி உள்ளது. ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில் ஆரோன் ராம்பே கோல் அடித்து ஆர்செனல் அணிக்கு மகத்தான வெற்றி பெற்றது.
பிரிமியர் லீக்கில் ஆரோன் ராம்சே அடித்த 2 வது கோல் இதுவாகும். ஆடுகளத்தின் 15 மீற்றர் தொலைவில் இருந்து அடித்த பந்தை மான்செஸ்டர் கோல் கீப்பர் எட்வின வான்டெர்சர் தடுக்க முடியவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட ஆர்செனல் அணி 6 புள்ளிகள் பின் தங்கியுள்ளது.
பிரிமியர் லீக்கில் நடப்பு சாம்பியனான செலிசா அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை முந்தும் நிலை உள்ளது. ஆர்செனல் அணியின் மத்திய களப்பகுதியில் ராம்சே, லூக் வில் சர்ஸ், அலெக்ஸ் சாங் உறுதியுடன் ஆடினார். ஆந்த அணியின் கப்டன் செஸ்க் பாமிரகாஸ் காயம் காரணமாக ஆடவில்லை. அதேபோன்று மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நட்சத்திர வீரர் ரயான் கிக்ஸ் ப்ளு காய்ச்சல் காரணமாக ஆடவில்லை.
ஆட்டத்தின் முதல் 15 நிமிடத்தில் ஆர்செனல் வீரர்கள் 80 சதவீதம் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்ட நேர முழுமைக்கும் அவர்கள் 57 சதவீதம் ஆதிக்கம் செலுத்தினார்கள். மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் அணியை வென்றது. மான்செஸ்டர் சிட்டி அணிக்கு டே ஜோஸ் 10 வது நிமிடத்திலும் ஜபலெட்டா 16 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். வெஸ்ட் ஹாம் அணிக்கு 33 வது நிமிடத்தில் பா கோல் அடித்தார்.
News:Lankasiri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget