Pages

Saturday, May 14, 2011

ஐ.பி.எல். போட்டிகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்ரீ லங்கா பிரீமியர் கிரிக்கட் போட்டிகள் ஜுலையில் ஆரம்பம்

Best Blogger Tips
இந்தியாவின் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளுக்குச் சவால் விடும் வகையில் இலங்கை பிரீமியர் (எஸ்எல்பிஎல்) போட்டிகள் எதிர்வரும் ஜுலையில் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளின் போது ஒவ்வொரு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஒவ்வொரு பிரீமியர் லீக் கிரிக்கட் அணி இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் உருவாக்கப்படவுள்ளது. 
தொடர்ச்சியாக பதினெட்டு நாட்கள் வரை 24 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறும்  இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளும் உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. அதற்கான ஒளிபரப்பு உரிமையை முதல் இரண்டு வருடங்கள் வரை கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் சேனல் பெற்றுக் கொண்டுள்ளது.
பிரஸ்தாப சேனல் ஜனாதிபதியின் இரண்டாம் மகனும் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ஷவின் காதலிக்கு உரித்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது வடக்கு கிரிக்கட் அணிக்கு ஒரிக்ஸ் அணி என்றும் கிழக்கு கிரிக்கட் அணிக்கு நாகா (நாகம்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget