ஐ.பி.எல் போட்டியில் கிடைத்த மரியாதையும், ரசிகர்களின் அன்பும் மேற்கிந்தியத் தீவுகளில் கிடைக்கவில்லை என பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பது: ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய போது உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்கள் என் மீது அன்பும், மரியாதையும் காட்டினர். ஆனால் இது ஒருபோதும் மேற்கிந்தியத் தீவுகளில் கிடைத்ததில்லை.
மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து மூன்று வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் டேரன் பிராவோ மட்டுமே சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் இடம்பிடித்திருந்தார். கோப்பையை வென்ற அணியில் பிராவோ இடம்பெற்றது மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரியில் பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கெயில் விலை போகவில்லை. பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய வீரர் திர்க் நேன்ஸ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக கெயில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கட் வாரியத்துக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருப்பினும் 12 ஆட்டங்களில் விளையாடிய அவர், 2 சதங்களுடன் 608 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
News:Lankasri


0 comments:
Post a Comment