Pages

Saturday, May 14, 2011

அவுஸ்திரேலிய வீரர் ஜான்சனின் ரகசிய திருமணம்

Best Blogger Tips
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தனது தோழியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த ரகசிய திருமணத்திற்கு தனது தாயாரைக்கூட அவர் அழைக்கவில்லை என்று "தி டெய்லி கிராப்" செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.
29 வயதான ஜான்சன் வாரியர்ஸ் அணியில் விளையாடுவதற்காக மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு 2008ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது கராத்தே சாம்பியன் ஜெஸிகாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெஸிகாவை திருமணம் செய்து கொண்டதை அவர் பேஸ்புக்கில் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு ஜான்சன் தனது தாயாரை அழைக்காததன் மூலம் அவரை அவமதித்துவிட்டார் என அவரது உறவினர்கள் சிலர் குறை கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget