Pages

Wednesday, May 25, 2011

மான்செஸ்டர் யுனைடெட் மரியாதைக்கு உரிய அணி: விடிக்

Best Blogger Tips
மான்செஸ்டர் யுனைடெட் அணி சக்தி வாய்ந்த, மரியாதைக்கு உரிய அணி என கிளப் கப்டன் நெமன்ஜா விடிக் தெரிவித்தார்.
வருகிற சனிக்கிழமை வெம்ப்ளியில் சாம்பியன் லீக் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதுகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரோம் நகரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பாரிசிலோனா அணி வீழ்த்தியது.
சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் அணிக்கு என ஒரு தனி மரியாதை உள்ளது என அணி கப்டன் நெமன்ஜா விடிக் தெரிவித்தார். பார்சிலோனா அணி நல்ல அணி தான். சில நல்ல விளையாட்டுகளையும் மேற்கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் எந்தப் போட்டியிலும் வெற்றி காணாத அணி அல்ல. நாங்கள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சாம்பியன் லீக் இறுதிப்போட்டிக்காக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சில வீரர்களை மேலாளர் பெர்குசன் மாற்றம் செய்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் 4 சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மான்செஸ்டர் யுனைடெட் அணி உள்ளது. இந்த சாம்பியன் லீக் எங்களின் 3 வது இறுதிப்போட்டி. இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என யுனைடெட் அணியின் கப்டன் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் பல பெரிய போட்டிகளை எதிர் கொண்டுள்ளோம். அந்த அனுபவத்தை பயன்படுத்தி சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோம் என்றும் விடிக் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

Text Widget

Text Widget