Pages

Monday, May 30, 2011

சாம்பியன் லீக் கால்பந்து: பார்சிலோனா சாம்பியன்

Best Blogger Tips
பார்சிலோனா கால்பந்து அணி வெம்ப்ளியில் நடந்த சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
கடந்த 3 ஆண்டுகளில் 2 வது முறை பார்சிலோனா அணி சாம்பியன் லீக் பரிசுக்கோப்பையை கைப்பற்றி உள்ளது. 2009 ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த இறுதிப்போட்டியில் ஆடியதை விட மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக இந்த ஆட்டத்தில் ஆடியது. இருப்பினும் சிறந்த அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்ற ஆறுதலுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெளியேறியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் பெட்ரோ அடித்த கோலுக்கு ஈடு செய்யும் வகையில் ரூனி கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் பார்சிலோனாவின் முன்கள வீரரான லயோனல் மெஸ்சி அதிரடியாக ஆடினார். அவர் இங்கிலிஷ் மண்ணில் தனது முதல் கோலை அடித்து பார்சிலோனா அணிக்கு பரிசுக்கோப்பையை பெற்றுத் தந்தார்.
2 வது பாதியின் 9 வது நிமிடத்தில் இந்த கோல் கிடைத்தது. ஆட்டம் முடிய 20 நிமிடம் இருந்த நிலையில் டேவிட் வில்லா பார்சிலோனா அணிக்கு 3 வது கோலை அடித்தார். ஐரொப்பிய சாம்பியன் லீக் போட்டியில் பார்சிலோனா அணி 4 வது முறை பரிசுக்கோப்பையை வென்றுள்ளது. நடப்பு லீக் இறுதிப்போட்டியில் பெட்ரோ, லயோனல் மெஸ்சி, டேவிட வில்லா கோல் அடித்தார்கள். தோல்வியை தழுவிய மான்செஸ்டர் யுனைடெட் அணி உரிய துவக்கத்தை தரவில்லை.
ஐரொப்பிய சாம்பியன் லீக் போட்டியில் பார்சிலோனா அணி 1992, 2006, 2009, 2011 ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆகி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணி 1968, 1999, 2008 ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆன அணியாகும்.

News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget