Pages

Thursday, May 12, 2011

பிரிமியர் கால்பந்து: ஆர்சனல் பதவி பெர்குசன் நிராகரித்தார்

Best Blogger Tips
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் மேலாளராக சர் அலெக்ஸ் பெர்குசன் உள்ளார்.
இவர் மான்செஸ்டர் அணியில் சேருவதற்கு முன்னர் ஆர்சனல் கிளப்பில் மேலாளராக சேர அழைப்பு வந்தது. கடந்த 1986 ம் ஆண்டு இந்த அழைப்பு அவருக்கு வந்தது. ஆனால் பெர்குசன் ஏற்கவில்லை.
இதுகுறித்து செவ்வாய்கிழமை பெர்குசன் கூறுகையில், ஆர்சனல் அணியில் வாய்ப்பு கிடைத்ததும் என்னுடன் வால்டர் ஸ்மித்தை அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆர்சனல் வாய்ப்பு குறித்து வால்டரிடம் கூறியபோது அந்த அணி மிகப் பெரிய கிளப் என வால்டர் கூறினார்.
அந்த நிலையில் ஆர்சனலுடன் இணைய வால்டரை அழைத்தேன். ஆனால் அவர் ரேஞ்சர்ஸ் கிளப்புக்கு செல்வதாக கூறி அதிர வைத்தார். இந்த நிலையில் ஆர்சனல் அழைப்பை ஏற்க முடியவில்லை.
ஏனெனில் அப்போது ஸ்காட்லாந்து அணியுடன் மெக்சிகோ உலகக் கோப்பைக்கு சென்று கொண்டிருந்தேன் என பெர்குசன் கூறினார். வால்டர் ஸ்மித் ரேஞ்சர்ஸ் அணிக்கும், நான் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் சென்றோம் என்றும் பெர்குசன் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை ஸ்காட்டிஷ் பிரிமியர் லீக்கில் ரேஞ்சர்ஸ் அணியும், டன்டி யுனைடெட் அணியும் மோதின. வால்டர் ஸ்மித் பொறுப்பு வகிக்கும் கடைசி ஆட்டம் இதுவாகும். இந்த நிலையில் பெர்குசன் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget