Pages

Sunday, May 22, 2011

கோல் அடிப்பதில் ரொனால்டோ புதிய சாதனை

Best Blogger Tips
ரியல் மாட்ரிட் அணியின் அதிரடி வீரர் ரொனால்டோ லீக் கால்பந்து போட்டியில் கோல் அடிப்பதில் புதிய சாதனை படைத்துள்ளார்.
அவர் சனிக்கிழமை அல்மேரியா அணியுடன் மோதிய ஆட்டத்தில் தமது அணி 8-1 கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார். இந்த ஆட்டத்தில் 26 வயது ரொனால்டோ 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 40 லீக் கோல்களை அடித்த சாதனை வீரர் ஆனார்.
ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர் லா லிகா சாதனையையும் முறியடித்தார். கடந்த 4 ஆட்டத்தில் ரொனால்டோ 11 கோல் அடித்தார். பிரிமியர் லீக் உள்ள அனைத்து போட்டிகளும் இந்த சீசனில் ரொனால்டோ 53 கோல் அடித்தார்.
தனது கோல் குவிப்பில் அவர் 7 ஹாட்ரிக் கோல் சாகனை படைத்துள்ளார். ஹாட்ரிக் என்பது ஒரு ஆட்டத்தில் தொடர்ந்து 3 கோல்களை போடும் அற்புத சாதனையாகும். தனது கோல் குவிப்பு சாதனை குறித்து ரொனால்டோ கூறுகையில், எனது மாட்ரிட் அணியினருக்கே கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்களது ஒத்துழைப்பால் தான் என்னால் இவ்வளவு கோல்களை குவிக்க முடிந்தது என தெரிவித்தார். அவர்கள் உதவி இல்லாமல் இந்த லீக் சீசனில் 40 கோல் அடித்திருக்க முடியாது என்றும் அவர் நெகிழ்வுடன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget