Pages

Saturday, May 21, 2011

விளம்பர உலகின் செல்வாக்குமிக்க நாயகனாக டோனி

Best Blogger Tips
விளம்பர உலகில் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்கள் வரிசையில் இந்திய கப்டன் டோனி முன்னணியில் இருக்கிறார்.
இவர் நடால், கோப் பிரயண்ட் போன்ற சர்வதேச நட்சத்திரங்களை முந்தி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கப்டன் தோனி 2007 இல் இவரது தலைமையிலான அணி " ருவென்ரி20' உலகக் கிண்ணத்தை வென்றது. சமீபத்தில் 50 ஓவர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றினார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுக் கொடுத்தார்.
இவர் தொட்ட தெல்லாம் பொன்னாக விளம்பர நிறுனவங்கள் மொய்க்கத் தொடங்கின. தங்களது பொருட்களுக்கு "மொடலாக' தோன்ற இவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தன. லண்டனிலிருந்து வெளியாகும். "ஸ்போர்ட்ஸ் புரோ' என்ற பத்திரிகையின் சமீபத்திய கணிப்பின்படி தென்கிழக்கு ஆசியாவின் நம்பர்1 விளம்பர நட்சத்திரமாக தோனி திகழ்கிறார்.
இப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஸ்பெயின் டெனிஸ் வீரர் நடால், அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிரயன்ட் ஆகியோரை முந்திய தோனி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் ஐமேக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளார். கால் பந்து வீரர்களான கிறிஸ்ரியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி முறையே மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனர். சீனாவின் பிரபல கூடைப்பந்து வீரர் யாவ் மிங் 11 ஆவது இடத்தை பெற்றுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளில் அசத்தி தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் யவராஜ் சிங் 49 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
"முதல்10 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் நட்சத்திரம் என்ற பெருமையை "டெனிஸ் புயல்' கரோலின் வோஸ்னியாக்கி (9 ஆவது இடம்) பெறுகிறார். இது குறித்து "ஸ்போர்ட்ஸ் புரோ' பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் குஷன் கூறுகையில் "உலகக் கிண்ணத்தை வென்ற பின் தோனியின் புகழ் விளம்பர உலகில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் சச்சின் அளவுக்கு பேராதரவு இல்லை .ஆனாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்களது பொருட்களை விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்களின் நம்பர்1 தேர்வாக தோனி திகழ்கிறார்' என்றார்.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget