இலங்கை கிரிக்கட் அணி 3 பயிற்சி ஆட்டம், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.முதல் பயிற்சி ஆட்டம் வருகிற 26ந் திகதி தொடங்குகிறது. இங்கிலாந்து லயன்சுடன் மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.
இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்று அணியின் மேலாளர் டென்னிகூன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,"அணிக்கு வெளியே இருந்து இலங்கை வீரர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. வீரர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை மிகவும் கவனமாக பார்க்க வேண்டியுள்ளது. வீரர்களை நான் மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகிறேன்" என்றார்.
இலங்கை அணியின் முன்னாள் கப்டன் சமீபத்தில் இலங்கை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக புகார் கூறியிருந்தார். 1992ம் ஆண்டில் இருந்து புற்றுநோய் போல இலங்கை அணியில் சூதாட்டம் பரவி இருப்பதாக கூறி இருந்தார்.
இது தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாகவே இங்கிலாந்தில் விளையாடும் இலங்கை வீரர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News:Lankasri
News


0 comments:
Post a Comment