Pages

Saturday, May 21, 2011

மெஸ்சி இன்னும் சிறந்த நிலையை அடையவில்லை: பீலே

Best Blogger Tips
ஸ்பெயினின் பார்சிலோனா முன்கள வீரர் மெஸ்சி உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.
அனைத்து காலகட்டத்திலும் சிறந்த வீரர் என்ற இலக்கையும் அவர் நெருங்கிக் கொண்டு இருக்கிறார். இருப்பினும் மெஸ்சி மிகச்சிறந்த நிலையை அடையவில்லை என பிரேசில் சாதனையாளர் பீலே கூறுகிறார்.
கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு காலகட்டங்களில் சாகசம் படைத்த வீரர்களுடன் ஒப்பிடுகையில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சி இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது என பீலே கூறினார். உலகின் அனைத்து தருணத்திலும் அற்புதமான வீரர் என்ற பிரசாரம் மெஸ்சியை சூழ்ந்துள்ளது. இப்படி பிரசாரம் செய்யும் மற்றும் ஒப்பீடு செய்யும் நபர்கள் ஜோகன் கிரயப், மைக்கல் பிளாட்டினி, அல்பிரடோ டி ஸ்டெபனோ ஆகிய சரித்திர வீரர்களை மறந்துவிட்டார்கள். இந்த வீரர்கள் மெஸ்சியை விட மிகச்சிறந்த சாதனை நிகழ்த்தியவர்கள் என பீலே குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்தை லா டெர்செரா என்ற சிலி நாட்டு நாளிதழ் வெளியிட்டுள்ளது. பிரேசிலுடன் 3 முறை உலகக்கோப்பை சாம்பியன் வென்ற பீலே, சாம்பியன் லீக் இறுதிப்போட்டி குறித்தும் கூறினார். மே 28 ம் திகதி பார்சிலோனா அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வெம்ளியில் ஏன் வீழ்த்தக் கூடாது என கூறியுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் வலிமையான அணி இங்கிலிஷ் ஸ்டைல் கால்பந்துக்கு ஒன்றி உள்ள அணி. அதே நேரத்தில் பார்சிலோனா உலகின் தலைசிறந்த அணி என பீலே தெரிவித்தார். பீலேவின் கருத்தை பொய்யாக்கும் வகையில் ஐரோப்பா புகழின் உச்ச நிலைக்கு பார்சிலோனா அணியை மெஸ்சி கொண்டு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2009 ம் ஆண்டு சாம்பியன் லீக் கால்பந்து இறுதிப்போட்டியில் யுனைடெட் அணிக்கு எதிராக ஆடிய போது மெஸ்சி அடித்த கோலால் 2-0 வெற்றி கிடைத்தது.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget