Pages

Friday, May 27, 2011

ஊழல் பிரச்சினையில் தவிக்கும் சர்வதேச கால்பந்து அமைப்பு

Best Blogger Tips
ஊழல் விவகாரத்தில் சர்வதேச கால்பந்து அமைப்பு “பிபா” தவிக்கிறது.
இந்த அமைப்பின் தலைவர் வேட்பாளர் முகமது பின் ஹம்மம் மற்றும் துணைத்தலைவர் ஜாக் வார்னர் மீது 40 ஆயிரம் டொலர் லஞ்சக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த இரு தலைவர்களும் பிபா விசாரணைக் கமிட்டி முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆஜராகிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டால், இவர்கள் நீண்ட காலம் கால்பந்து அமைப்பில் செயல்பட முடியாத தடை விதிக்கப்படும்.

இருவர் மீதும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை பிபா செயற்குழு உறுப்பினர் சக்பிளேசர் சுமத்தி உள்ளார். பிபா அமைப்பு தலைவர் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை நடக்கிறது. இந்த தலைமை பதவிக்கு செப் பிளாட்டரும், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின் ஹம்மமும் போட்டியிடுகின்றனர்.
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பின் ஹம்மம் கூறுகையில், தான் ஆதாயம் பெற பிளேட்டர் செய்த சதி என்றார். கத்தார் 2022 ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த முயற்சி மேற்கொண்டது. உலகக்கோப்பை போட்டியை நடத்தும் அனுமதியை பெற பிபாவின் இதர 2 உறுப்பினர்களுக்கு கத்தாரில் இருந்து லஞ்சம் தரப்பட்டுள்ளது என டாமியன் காலின்ஸ் எம்.பி. நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டி உள்ளார்.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget