அந்த அணி லெவன் டே நகரில் 1-1 கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்ததை தொடர்ந்து ஸ்பெயின் போட்டியில் தனது ஆதிக்க்த்தை மீண்டும் நிலைநிறுத்தியது.
இந்த ஆண்டு பலவித மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் பார்சிலோனா அசத்தலாக ஆடி பரிசுக் கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மாட்ரிட் கால்பந்து அணி கடந்த கோடை காலத்தில் ஜோஸ் மவுரினோவை கொண்டு வந்து பழைய நீண்ட கால எதிரியான பார்சிலோனாவை ஒடுக்க முயன்றது. மவுரினோ தான் ஆடிய ஆட்டங்களில் வெற்றியாளராகவே வலம் வந்தார்.
இவர் போர்டோ அணியுடன் சாம்பியன் லீக் வெற்றி வாகை சூடினார். செலிசா அணியுடன் அவருக்கு நல்ல வெற்றி கிடைத்தது. மாட்ரிட் அணி கோபா டெல்ரே போட்டியில் 1-0 கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வென்று இருந்தது.
மவுரினோ மாட்ரிட் அணியில் இடம் பெற்றதன் மூலம் பார்சிலோனாவுக்கு அதிரடி சவால் தரலாம் என எதி;ர்பார்க்கப்பட்டது. ஆனால் மாட்ரிட் உரிய சாதனை படைக்க முடியவில்லை. பார்சிலோனாவை வீழ்த்த எவ்வளவு பணம் செலவழித்த போதும் மாற்றஙகள் செய்த போதும் மாட்ரிட் அணியால் தனது பலமிக்க எதிரிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
News:Lankasri


0 comments:
Post a Comment