Pages

Monday, May 23, 2011

உலகின் பெரிய கிளப் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு வெற்றி: ரூனி நம்பிக்கை

Best Blogger Tips
உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பாக உள்ள மான்செஸ்டர்ஸ் யுனைடெட் அணி தொடர்ந்து வெற்றி பெறும் என வெய்ன் ரூனி நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் சாதனை படைத்த மான்செஸ்டர்ஸ் யுனைடெட் அணி, சாம்பியன் லீக் கால்பந்து போட்டியிலும் வெற்றி பெறும் என ரூனி தெரிவித்தார். பிரிமியர் லீக்கில் சவால் எழுப்பிய செலிசா அணி குறித்து ரூனி கூறுகையில், பிரிமியர் இறுதிப் போட்டியில் செலிசா அணி ஆட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. நாங்கள் அவர்களுடன் ஆடிய ஆட்டத்தை இழந்திருந்தால் செலிசா முன்னனி பெற்றிருக்கும் என்றார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-2 கோல் கணக்கில் பிரிமியர் லீக்கில் செலிசா அணியை தோற்கடித்தது. சனிக்கிழமை சாம்பியன் லீக் இறுதிப் போட்டி நடக்கிறது. வெம்ளி மைதானத்தில் பார்சிலோனா அணியை எதிர்த்து மான்செஸ்டர் அணி ஆடுகிறது.
பரிசுக்கோப்பைகளையும், பதக்கங்களையும் பெறவே ஆடுகிறோம். அணியின் மகத்தான வெற்றிக்கு கூட்டு முயற்சியே காரணம். இந்த சீசனில் முதல் பாதியில் நான் எதிர்பார்த்த அளவு ஆடவில்லை. பின் பகுதியில் அணிக்கு எனது பங்களிப்பை அளித்தேன் என ரூனி பெருமிதத்துடன் கூறினார்.
சனிக்கிழமை நடைபெறும் சாம்பியன் லீக் போட்டியில் பரிசை வெல்வது தான் எங்களது லட்சியம் என்றும் அவர் தெரிவித்தார்.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget