சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி வருகிற சனிக்கிழமை வெம்ளியில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் பரிசுக்கோப்பையை வெல்ல பார்சிலோனா அணியும், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் களம் இறங்குகின்றன. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சாம்பியன் ஆக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பலவீனங்களை பயன்படுத்துவோம் என பார்சிலோனா அதிரடி வீரர் லியோனல் மெஸ்சி கூறினார்.
உலகின் அதி சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிற மெஸ்சி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 2009 ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் அணியை பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் வென்றது.
ரோம் நகரில் நடந்த அந்த இறுதிப் போட்டியில் பார்சிலோனாவின் 2 வது கோலை மெஸ்சி அடித்து யுனைடெட் அணிக்கு தோல்வியை தந்தார். ரோம் நகரில் நடந்த இறுதிப்போட்டி தனது நினைவில் நன்றாக உள்ளது. ஆனால் அவை கடந்த காலத்தில் நடந்த நிகழ்வு என மெஸ்சி கூறினார்.
தற்போதைய சாம்பியன்ஸ் லீக்கில் ஆடும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சில வீரர்கள் மாற்றம் நடந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பலவீனமாக இருந்த யுனைடெட் அணியை போன்று இப்போதும் இருக்காது. இருப்பினும் யுனைடெட் அணியின் பலவீனத்தை பயன்படுத்துவோம் என பார்சிலோனா முன்கள வீரர் மெஸ்சி நம்பிக்கை தெரிவித்தார்.
News:Manithan



0 comments:
Post a Comment