மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற வேண்டும் என கொல்கத்தா அணியின் கப்டன் காம்பிர் தெரிவித்துள்ளார்.கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பினை உறுதிப்படுத்த வேண்டுமானால் புணே வாரியர்ஸ்க்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதில் "ஆல்-ரவுண்ட்" ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. தற்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கடின பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கப்டன் காம்பிர் கூறியது: மும்பைக்கு எதிரான கடைசி லீக் போட்டி மிகவும் முக்கியமான போட்டி. இதில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவதே எங்களுடைய குறிக்கோள்.
இப்போட்டியில் வெல்வதற்கு அதிகப்படியான உழைப்பை கொடுக்க வேண்டும். துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் வலுவாக செயல்படுவதன் மூலம் வெற்றியை வசப்படுத்த முடியும். கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அசத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
பந்து வீச்சாளர்களும் தங்களுடைய பணியை சிறப்பாகவே செய்தனர். முதலாவதாக துடுப்பெடுத்தாடிய யுவராஜ் அணி 135 முதல் 140 ரன்கள் வரை எட்டுவார்கள் என நினைத்தேன். ஆனால் எங்களுடைய சிறப்பான பந்துவீச்சால் 118 ரன்களுக்கு சுருண்டனர். இதனால் எளிய வெற்றி பெற முடிந்தது.


0 comments:
Post a Comment