ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 2வது இடமும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3வது இடமும் வகிக்கின்றனர்.அமெரிக்க வீரர்கள் மார்ட் பிஷ் 11வது இடமும், ஆன்டிரோட்டிக் 12 வது இடமும் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். பெல்ஜியம் வீராங்கனை கிம்கிலிஸ்ஸடர் 2வது இடமும் ரஷ்ய வீராங்கனை சோனரோவா 3வது இடமும் பெற்றுள்ளனர்.
அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 10வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 38 ஆண்டு கால உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அமெரிக்க வீரர் வீராங்கனைகள் இடம் பிடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது



0 comments:
Post a Comment