Pages

Saturday, May 28, 2011

இலங்கை அணியின் தலைவரின் கருத்துக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு

Best Blogger Tips
தான் மீண்டும் பாகிஸ்தானில் விளையாட விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் கூறியமைக்கு பாகிஸ்தானிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திலகரட்ன தில்ஷானின் கருத்துகளை சாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் லெப். ஜெனரல் தாகிர் ஸியா, அணித்தலைவர் என்ற வகையில் இவ்வகையான கருத்துக்களை வெளியிடுவதை தில்ஷான் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் துறைக்கு எப்போதும் பாகிஸ்தான் ஆதரவாக இருந்துவந்துள்ளது எனவும் தாகிர் ஸியா கூறினார்.
தாகிர் ஸியா 1999 முதல் 2004 ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் வீரரான அப்துல் காதிரும் தில்ஷானை விமர்சித்துள்ளார்.
தில்ஷானின் கருத்து பொறுப்பற்றதாகும் எனக்கூறிய அப்துல் காதிர், இது கிரிக்கெட் விளையாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இலங்கை கிரிக்கெட் சபையும் ஐ.சி.சியும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget