மேலும் அவரின் கேமராவையும், மைக்ரோபோனையும் பறிக்க முயன்றதாக கெயில் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கெயில், பெங்களூரில் உள்ள ஷாப்பிங் சென்டருக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று படம் பிடிக்க முயன்றுள்ளது ஒரு தனியார் தொலைக்காட்சி.
இதனால் கோபமடைந்த கெயில், தன்னை சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி திட்டியதோடு,அவர்களை தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. கெயிலுடன் பாதுகாப்புக்கு சென்ற காவலர்களும் தொலைக்காட்சி சேனலைச் சேர்ந்தவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு இருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப் படுத்தியுள்ளனர். இதையடுத்து கெயில் தரப்பினர் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக பெங்களூர் பத்திரிகையாளர்கள், நகர பொலிஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷிடம் புகார் செய்துள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சார்பில் விளையாடி வருகிறார் கெயில். ஏற்கெனவே கெயிலுக்கும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டி.வி. செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புதிய பிரச்னையில் சிக்கியுள்ளார் கெயில்.
News:Lankasri


0 comments:
Post a Comment